பா.ஜ.க. -அ.தி.மு.க. அணிக்கே ஆதரவாம்!

பார்ப்பனர் சங்கம் முடிவு செய்துவிட்டது - தமிழர்களே, உங்கள் முடிவு என்ன?

சென்னை, மார்ச் 18 நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பார்ப் பனர்கள் சங்கம் கூடி, பா... - .தி.மு.. அணிக்கே தங்களின் ஆதரவு என்று திட்டவட்டமாக  அறி வித்துவிட்டனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடை பெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் பழநியில் நடைபெற்றது‌.

சங்கத்தின் மாநிலத் தலைவர் ஹரி ஹர முத்தூர் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத் தில், பார்ப்பன சமூகத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும்திராவிட முன்னேற்றகழகத் தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஆதரவு இல்லை என்றும், உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர் களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்த பாரதீய ஜனதா கட்சி இணைந்திருக்கும் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பார்ப்பனர்கள் சங்கம் முழு ஆதரவை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தேர்தலில் வெற்றி பெற்று .தி.மு.. மீண்டும் ஆட்சி அமைத்தால், பார்ப்பனர் சமூகத்துக்குத் தனி நல வாரியம் அமைக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. செயற்குழுக் கூட்டத்தில் பார்ப் பன சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழர்களே! உங்கள் முடிவு என்ன? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக நடைபெறும் பார்ப்பனர் - பார்ப் பனரல்லாதார் போராட்டத்தின் ஒரு காலகட்டம் இது - பார்ப்பனர் அல் லாதாரின் சமூகநீதிக்காக பார்ப் பனரல்லாத திராவிட இயக்கம் போராடிப் போராடி பல உரிமை களையும் ஈட்டித்தந்துள்ளது. அதனை ஒழிக்கும் களத்தில் நிற்கும் பா... -

.தி.மு.. கூட்டணியை  முறியடிக்க வேண்டாமா?

Comments