உலக உழைக்கும் மகளிர் நாளில் தந்தை பெரியாரின் நூல்கள் வழங்கல்

 நாட்டறம்பள்ளி, மார்ச் 21 திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம் பள்ளியில் வசந்தி நினைவு நாட்டுப்புற கலைப்பள்ளியின் சார்பாக உலக மகளிர் நாள் 8.3.2021 அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்த அறக்கட்டளையின் செயலாளர் பொ.வளர்மதி தலைமை தாங்கினார். கலையரசி சூரியா அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேளாளர் பி.சுஜிதாசிறீராம், இலட்சுமி சிவசங்கரன், திருவாசுகி, செந்தமிழ்முருகன், கு.கு.மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் தந்தை பெரியாரின்பெண் ஏன் அடிமையானாள்”, “திராவிடம் வெல்லும்“, உள்ளிட்ட நூல்கள் வழங்கப் பட்டன.

Comments