டில்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் திட்டம்

புதுடில்லி, மார்ச் 14 டில்லியில் முதல் அமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடந்து வருகிறது

  கர் கர் ரேசன் யோஜனா என்ற பெயரில் ரேசன் பொருட் களைமக்களுக்கு, வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தினை முதல் அமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

இந்த திட்டத்தின்படி, டில்லி யில் உள்ள மக்களுக்கு ரேசன் பொருட்கள் வீட்டுக்கே சென்று வினியோகம் செய்யப்படும். 

இத னால் வயது முதிர்ந்தோர், உடல்நலம் குன்றியோரின் அலைச்சல் தவிர்க்கப்படுவதுடன், வெயிலில் வரிசையில் நிற்பது, காலவிரயம் போன்றவை தவிர்க்கப் படும்.

இதுபற்றி உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் இம்ரான் உசைன் கூறும்பொழுது,

டில்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் வருகிற 25ஆம் தேதி முதல்வரின் வீடுகளுக்கு ரேசன் பொருள்கள் வழங்கும் திட்டம் என்ற திட்டத் தினை தொடங்கி வைக்கிறார்.

இதன்படி, சீமாபுரி வட்டத்தில் உள்ள 100 வீடுகளுக்கு ரேசன் பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தினை அவர் தொடங்கி வைக்கிறார்.

 வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிற வட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image