சுக்கை மிஞ்சிய வைத்தியமில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 22, 2021

சுக்கை மிஞ்சிய வைத்தியமில்லை


 *சுக்கை இழைத்துப் பற்று போட தலைவலி நீங்கும்.

*சுக்கு சிறு துண்டு வாயில் இட்டு மென்று அடக்கி வைக்க பல்வலி தீரும்.

*சுக்கை நசுக்கி ஒரு துணியில் சிறு மூட்டை கட்டி காதில் வைத்திருக்க காதடைப்பு, நீரடைப்பு தீரும்.

*சுக்குப்பொடி வெந்நீரில் கலந்து குடிக்க அஜீரணம் நீங்கும். உஷ்ண பேதி, சீதபேதி, வாந்தி கட்டுப்படுத்தும்.

*மார்பு எரிச்சல், வயிற்றுவலி, நெஞ்சுவலி, புளியேப்பம் இவற்றைப் போக்கும்.

*வயிற்றுப்பொருமல், வயிற்றிரைச்சல், வயிற்றுப்பசி நோயைத் தீர்க்கும்.

*சளி, இருமலைப் போக்கும்.

*வாத நோய்களை கட்டுப்படுத்தும்.

*குதம், ஆசனவாய் கடுப்பு எரிச்சல் முதலியவற்றைப் போக்கும்.

*காசம் எனும் ஆஸ்துமா, சைனஸ் நோய்களை கட்டுப்படுத்தும்.

*இதய நோய்கள் மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்தும்.

*உடலில் ஏற்படும் வீக்கம், கட்டி இவைகளை குணப்படுத்தும்.

*நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

*சுக்குத்தைலம் தலைக்குத் தேய்த்து குளிக்க ஒற்றைத்தலைவலி, தலைவலி, சைனஸ், காது வலி இவைகள் தீரும்.

*தினமும் ஏதாகிலும் ஒரு வகையில் சுக்கை நாம் உட்கொள்ள நோய்கள் வராமலும், வந்த நோய்கள் நீங்கவும் பேருதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment