சாத்தான்குளம் காவல்நிலைய சம்பவங்கள் மீது நடவடிக்கை: சித்ரவதை தடுப்பு மசோதாவில் திருத்தங்கள்! மத்திய அரசு பரிசீலனை

.இராசா கடிதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில்

புதுடில்லி, மார்ச் 16-சித்ரவதை தடுப்பு மசோதாவில் சில திருத்தங்கள் கொண்டு வருவது குறித்துமாநில அரசுகள் மற்றும் நீதிமன்றங்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்துவருவதாக மக்களவை தி.மு.. உறுப்பினர் .ராசாவுக்கு மத்திய உள் துறை இணை அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களைவை திமுக கொறடா .ராசா கடந்த ஆண்டு ஜூலை 2ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். சித்ர வதை திருத்த மசோதாவில் சில திருத் தங்கள் கொண்டு வருவதன் அவசியம் பற்றி அந்தக்கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் என்ற தந்தை-மகன் கொடூரமாகத் சித்ரவதைச் செய்து காவ லர்களால் கொல்லப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, இந்த நவீன நாகரிககாலத்தில் காவல் நிலைய விசாரணையின் போது காவலர்களால் கைதிகள் கொல்லப் படுவது மோசமான குற்றமாகும் என்று .ராசா தெரிவித்துள்ளார்.

இது, காவலர் ஆய்வுமற்றும் வளர்ச்சி அமைப்பின் 50ஆவது நிறுவன நாளில் உள்துறை அமைச்சர் பேசிய பேச்சிற்கு முற்றிலும் எதிராக உள்ளது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விட்ட தாலேயே, அவர் அடிப்படை உரிமை களை இழந்துவிடும் நிலையில் காவலர் களால் நடத்தப்படக் கூடாது என்று உச்சநீதி மன்றம் தெளிவாக தெரிவித் துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளதை .ராசா, தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய சட்ட ஆணையமும் விசா ரணையின்போது கைதிகளுக்கு நடத் தப்படும் சித்ரவதைகள் தொடர்பாக பல்வேறு கருத்துகளை கேட்டறிந்து குற்றவியல் நடைமுறைப்பிரிவில் பல் வேறு திருத்தங்கள் செய்து, தனது 152ஆவது ஆண்டறிக்கையில் வெளியிட்டது. பின்னர் 10 ஆண்டுகள் கழித்து அதுவே நாடாளுமன்றத்தில் திருத்தங்கள் இணைக்கப்பட்டது. சித்ர வதை தொடர்பான அய்.நா.வின் ஜெனிவா கருத்தரங்கு 1975 மற்றும் 1984 ஆண்டுகளில் நடைபெற்று.

அதன் கருத்துக்கள் உள்ளிட்ட சித்ர வதை தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இன் றளவும் காவல் நிலையங்களில் விசார ணைக் கைதிகள் சித்ரவதை செய்யப் படுவது தொடர்ந்து கொண்டே இருக் கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி சவுகான் தலைமையிலான சட்ட ஆணையம் புதிய மசோதாவிற்காக சில பரிந்துரை களை தெரிவித்துள்ளது. உடல்ரீதியாக வும், மன ரீதியாகவும் விசாரணைக் கைதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண் டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை மக்களவை யில் அந்தமசோதா அறிமுகப்படுத்தப்பட வில்லை.

இப்படிப்பட்ட நிலையில், சித்ரவதை தடுப்பு மசோதாவை வர இருக்கும் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய தி.மு.. சார்பில்கேட்டுக் கொள்கிறேன். தேவைப்பட்டால் கூடுதல் நெறிமுறை களையும் அம்மசோதாவில் சேர்த்து, சாத்தான்குளம் காவல்நிலைய சம்பவங் கள் மீதுநடவடிக்கை எடுக்க உதவுமாறும் தேவைப்பட்டால் அவசரச் சட்டம் மூலம் இதுகுறித்த சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு .ராசா அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments