ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல் அய்தராபாத்:

·             அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தரவுகளால் அளவிடப்படும் பொருளாதாரம் மற்றும் அவர்களின் சொந்த நல்வாழ்வு போன்ற பிரச்சினைகளின் அடிப்படையில் பல இந்தியர்கள் முதன்மையாக வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது.  அவர்கள் மற்ற விஷயங் களைப் பற்றி அதிக அக்கறையுடனும் இருப்பதாகத் தெரிகிறது, குறிப்பாக இந்தியாவின் சிறுபான்மையினரின் துன்புறுத்தலுடன் தொடர்புடையவை. ராகுல் காந்தி போன்ற அகில இந்திய கட்சியின் தலைவர் தகுதியில் உள்ள ஒருவர் பிரச்சினையை எழுப்பினாலும், பெரும்பாலான ஊடகங்கள் வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கின்றன. ஆனால் நாம் உண்மையில் தவறான வழியில் செல்கிறோம் என்பதையும், நமது போக்கை சரிசெய்ய வேண்டிய எந்தவொரு முறையும் இல்லை என்பதையும் காட்டுகிறது என மூத்த பத்திரிக்கையாளர் ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.

· பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, மத்திய அரசின் கல்விக் கொள்கையை முற்றிலுமாக எதிர்க்கும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து:

·     சிறுபான்மை மக்களுக்கு எதிரான  குடியுரிமை திருத்த மசோதா  நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு அதிமுக, பாமக துணை போனது என திமுக தலைவர் மு..ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் குற்றம் சாட்டியுள்ளார்.

·     வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிக ஏற்பாடாகும். ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி, இந்த சதவீதம் கூடவும், குறையவும் வாய்ப்பு உண்டு என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான .பன்னீர் செல்வம் பேட்டி.

தி டெலிகிராப்:

·     மத்தியில் உள்ள தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி திராவிட நிலமான தமிழ் நாட்டில் பாஜக நுழைய முடியவில்லை. கோயில்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ் நாடு இருந்தாலும், ஹிந்து மதத்தைப் பின்பற்றுவோர் ஹிந்துத்வா கொள்கையை தவிர்க்கின்றனர். பாஜகவிற்கு பெரிய சவாலாக திராவிடக் கட்சிகள் உள்ளன என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- குடந்தை கருணா

30.3.2021

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image