குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு வக்காலத்து வாங்கிய அதிமுக இப்போது பின் வாங்குவது ஏன்?

 சென்னை பிரச்சாரத்தில் கே.பாலகிருஷ்ணன் கேள்வி...

சென்னை, மார்ச் 28 சிஏஏ, என்.பி. ஆர் சட்டங்களுக்கு பாஜகவுடன் சேர்ந்து கொண்டு வக்காலத்து வாங்கிய  அதிமுக இப்போது பம் முவது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் .வேலு (மயிலாப்பூர்), மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), தாயகம்கவி (திரு.வி. நகர்) ஆகியோருக்கு வாக்கு கேட்டு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். இந்தக் கூட்டங்களில் அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு:

அதிமுக- _ பாஜக அணி கடையாணி கழன்று போன வண்டி போல உள்ளது. 10 வருடமாக அவர்கள் எதையும் செய்யவில்லை. அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்பதாகத்தான் அதிமுகதேர்தல் அறிக்கை உள்ளது. அதிமுக-வின் 11 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரிக்காவிடில் குடியுரிமை திருத்தச் சட்டமே வந்திருக்காது. அந்த சட்டங்களுக்கு சட்டமன்றத்திலேயே வக்காலத்து வாங்கியது அதிமுக. தற்போது வீசும் எதிர்ப்பலையால், அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால்அந்த சட்டங்களை எதிர்த்து தீர்மானம் போடுவோம் என்கிறார்கள்.

நேரத்திற்கு ஏற்ப மாறுவது பச்சோந்தி அரசியல் இல்லையா?37 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எல்அய்சி நிறுவனத்தை அம்பானி அதானிக்கு அடிமாட்டு விலைக்கு விற்க உள்ளனர். 2 புடவை வாங் கினால் ஒன்று இலவசம் என்பது போல, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களை ஏலம் விடப் போகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தை தனியாருக்கு கொடுக்க உள்ளதன் முன்னோட்டமாக நடை மேடை கட்டணத்தை 50 ரூபாயாக உயர்த்திஉள்ளனர். மின்சாரத்தை தனியாருக்கு கொடுத்துவிட்டால் 100 யூனிட்இலவச மின்சாரம் கிடைக்காது. இவற்றை செய்யும் மோடிக்கு, அவருக்கு காவடி தூக்கும் எடப்பாடிக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது.

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு, விளைநிலங்களில் எண் ணெய் குழாய் புதைக்க, மின்கோபுரம் அமைக்க அனுமதி, விளை நிலங்கள் வழியாக 8வழிச் சாலை என விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி செயல்படும் எடப்பாடி விவசாயியா? இவ்வளவையும் செய்துவிட்டு எடப்பாடி தானொரு பச்சை விவசாயிஎன்று கூறிக் கொள்வது வேடிக்கை யாகவும், விநோதமாகவும் உள்ளது. காவல்துறைக்கு பொறுப் பான முதல் அமைச்சர், தூத்துக் குடியில் 13 பேர் சுட்டுக் கொல் லப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்கிறார். இப்படி இருந்தால் நாடு உருப்படுமா?

தமிழகம் எதில் வெற்றி நடை போடுகிறது? எல்லாவற்றிலும் கொள்ளையடிப்பதில் அதிமுகவு டன் போட்டிபோட யாராலும் முடியாது. கொடூர கரோனா நோயிலும் கொள்ளையடித்தவர்கள் அதிமுகவினர். எனவே, இருண்டு கிடக்கிறதமிழகத்தை மீட்கப் போராடுகிறோம். பணபலத்தால் மட்டும் வெற்றி பெற முடியாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்றதைப்போன்று 234 தொகுதி களிலும் திமுக தலைமையிலான அணி வெல்லும்.  ஒன்றிரண்டு இடங் களில் தப்பித்தவறிக்கூடபாஜக வென்றால், அது அதிமுக-விற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image