மாநில தேர்தல் ஆணையராக அரசு அதிகாரிக்கு பொறுப்பு தருவது கேலிக்கூத்தானது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 புதுடில்லி, மார்ச் 14 தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாநில தேர்தல் ஆணையரின் பொறுப்பை மத்திய, மாநிலங்கள் சார்ந்த அரசாங்க அதிகாரி களிடம் ஒப்படைப்பது அரசமைப் பையே கேலி செய்வது போன்றதாகும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவா மாநிலத்தின் சட்டத்துறைச் செயலாளராக இருந்தவருக்கு மாநில தேர்தல் ஆணையராக கூடுதல் பொறுப்பை அம்மாநில அரசு வழங் கியது. இது மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கோவா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டவர் உடனடியாக பதவி விலக உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக கோவா அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், பி.ஆர்.கவாய் மற்றும் ஹச்.ராய் ஆகி யோர் அமர்வு  12.3.2021 அன்று தீர்ப்பு வழங்கியது. அதில்,மத்திய, மாநில அரசாங்க அதிகாரிகளை மாநிலத்தின் தேர்தல் ஆணையராக நியமிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது என்பது கேலிக்கூத்தான ஒன்றாகும். இது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது. இதில் தேர்தல் ஆணையர்கள் என்ப வர்கள் சுதந்திரமாக செயல்பட வேண் டும். அந்த விவகாரத்தில் கண்டிப்பாக எந்தவித சமரசமும் கிடையாது. மேலும் தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டது என்பதால் அதில் அரசுகளின் தலையீடு இருக்கக் கூடாது. இது அனைத்து மாநிலங் களுக்கும் பொருந்தக் கூடியதாகும் என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Comments