மறைவு

பெரியார்தொண்டர் சுயமரியாதை சுடரொளி மா.மூவேந்தன் அவர்களின் தந்தை கு.மாணிக்கம் (வயது 97) இரண்டு நாட்களாக உடல் நலம் சரியில்லாத நிலையில் 9.3.2021 அன்று மாலை 6.30 மணிக்கு மறைவுற்றார். அப்போது அருகில் இருந்த அவரது இணையர் தேசம்மா (வயது 86) மூர்ச்சையாகி கீழே சரிந்தார். அவரை பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி  10.3.2021 அன்று அதிகாலை 3.00 மணிக்கு மறைவுற்றார்.

இருவர் மறைவு செய்தி அறிந்து மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், ..மாவட்ட செயலாளர் சிவந்திஅருணாசலம், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சி.மணி, மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, ஒன்றிய செயலாளர் து.ரமேஷ், தி.மு.. மேனாள் நகர்மன்ற தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன் மற்றும் தோழர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தி

பேத்தி கயல், மருமகள் மலர்விழி ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Comments