கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்


 கும்பகோணம், மார்ச் 14, கும்பகோணம், கடலங்குடி தெருவில்  13.3.2021 அன்று மாலை  6 மணியளவில்  திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

குடந்தை கழக மாவட்ட தலைவர் நிம்மதி தலைமை வகித்தார். குடந்தை கழக மாவட்டச் செயலாளர் துரைராசு வரவேற்றார்.

திராவிடர் கழக காப்பாளர்கள் ராஜகிரி கோ.தங்கராசு, ஜெயராமன், மண்டலத் தலைவர் அய்யனார், மண்டலச் செயலாளர் குருசாமி, தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங், தஞ்சை மாவட்டச் செயலாளர் அருணகிரி, குடந்தை பெருநகர தலைவர் கவுதமன், குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், விஜயக்குமார், .சிவக்குமார், குடந்தை கழக மாவட்ட அமைப்பாளர் அழகுவேல், பட்டுக்கோட்டை கழக மாவட்டச் செயலாளர் - வை.சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், பொருளாளர் வீ.குமரேசன், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

முன்னதாக ராணி குருவின் அறிவு பரதநாட்டிய பயிற்சியக மாணவிகளின் பரதநாட்டிய கலைநிகழ்ச்சியும், உறந்தை கருங்குயில் கணேஷ்  குழுவினரின்  இசை நிகழ்ச்சியும்  நடைபெற்றன.

குடந்தை பெருநகரச் செயலாளர் பீ.இரமேஷ் நன்றி கூறினார்.

Comments