தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்; ஆரியமும், அதன் அம்புகளும் வீழும் - திராவிடம் வெல்லும்!

 

*  திருமதி சசிகலா அரசியலிலிருந்து 'விலகினாரா' - 'ஒதுங்கினாரா?'

.தி.மு..வுக்குள் புகுந்து அரசியல் விளையாடும் பா...!

சசிகலா முடிவால் .தி.மு..வுக்கு வாக்குகள் கூடாது; எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும்!

பா...வின்சித்து' விளையாட்டால், அரசியலிலிருந்து சசிகலாவை  ஒதுங்கச்' செய்த ஏற்பாடு - எதிர் விளை வைத்தான் ஏற்படுத்தும்; .தி.மு.. வுக்குள் குழப்பத்தையும், கோஷ்டியையும் மேலும் உருவாக்கி, பொதுமக்கள் மத்தியில் தி.மு..வின் மீதான உறுதி யான நம்பிக்கையைத்தான் மேம்படுத் தும்; ஆரியமும், அதன் அம்புகளும் வீழும் - திராவிடம் வெல்லும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

திருமதி சசிகலா அவர்கள் பெங்களூ ருவிலிருந்து விடுதலையாகி வந்த நிலையில், செய்தியாளர்களிடையே பேசியபோது, ''தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக'' அறிவித்தார். ''அடக்குமுறைகளைச் சந்திப் பேன்'' என்றார்!

விடுதலையானபோது

என்ன சொன்னார் சசிகலா?

கடந்த பிப். 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில், அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, ''விரைவில் தொண்டர்களையும், மக்களையும் சந்திப் பேன்'' என்றார்!

.தி.மு..வில் அவர் உரிமை கோரிய வழக்கையும் விரைவுபடுத்த முயற்சி எடுத்தார்.

இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்த லில் தி.மு. கூட்டணியைத் தோற்கடிக்க சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை இணைத்தே சந்திக்கவேண்டும்; அவர்களை .தி.மு.. கூட்டணியில் இணைக்கவேண்டும் என்று பா... தரப்பில் வடக்கே இருந்து வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, .தி.மு..வின் இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பா...வின் முக்கிய பொறுப்பாளர்களுடன் பேசும்போது, ''திருமதி சசிகலாவை ஏற்க அவர்களோ, அவர்களில் ஒருவரோ தயக்கம் காட்டி, மறுப்புத் தெரிவித்ததாக'' ஊடகங்களில் செய்திகள் உலா வந்தன!

அவர்களை .தி.மு.. கூட்டணியில் இவர்கள் சேர்க்காவிட்டாலும், எங்களுக்குக் கொடுக்கும் இடங்களில் (அதுகூட அவர்கள் உத்தரவு போடும் பாணியில்) அவருக்குக் கொடுத்து இணைத்தால் மட்டுமே தி.மு..வைத் தோற்கடிக்க முடியும் என்று பயமுறுத்திய நிலையில், சசிகலா வந்தால் தன் நிலை கேள்விக்குறியாகிவிடுமே என்ற அச்சத்தால், அதற்கு இடமே இல்லை என்று தனது கட்சிப் பேச்சாளர்கள் (Spokesperson) மூலம் தெளிவுபடுத்தினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. டில்லியில் பிரதமரைச் சந்தித்து வெளியில் வந்து, நூற்றுக்கு நூறு சசிகலாவை சேர்ப்பதில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனால் ஏற்பட்ட தேக்கத்தைப் போக்கி, தந்திரமான சில வியூகத்தை வகுக்க பா... திட்டமிட்டே திருமதி சசிகலாவை அரசியலிலிருந்து 'ஒதுங்கியி ருப்பதாக' அறிக்கைவிட ஏற்பாடு செய் யப்பட்டிருக்கிறது என்றே தெரிகிறது. அதன்மூலம் தாங்கள் நினைக்கும் வண்ணம் - .தி.மு..வை வளைத்துவிட பா... செய்கின்ற ஓர் ஏற்பாடு (Ploy)  - சசிகலாவை வைத்தே இந்த காய் நகர்த் தப்பட்டிருக்கிறது என்பது நமது கருத்து.

அரசியலிலிருந்து விலகவில்லை -

ஒதுங்கித்தான் உள்ளார்

அரசியலிலிருந்து அவர் விலகவில்லை; ''ஒதுங்குவதாகவே'' குறிப்பிட்டுள்ளார்.

அரசியலிலிருந்து விலகுவது வேறு; அது முற்றுப்புள்ளி போல!

அரசியலிலிருந்து ஒதுங்குவது என்பது அரைப்புள்ளி; (செமிகோலன்) போல!

சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக வேகம் காட்டியவர். இப்பொழுது 'யூ டேர்ன்' எடுத்து, அரசியலிலிருந்து 'ஒதுங்குவதாக' அறிக்கை வெளியிடுவதை சாதாரணமாகவோ, இயல்பானதாகவோ அரசியல் தெரிந்தவர்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

.தி.மு..வின் இரு பிரிவுகளையும் இணைக்க முயன்று, அதில் வெற்றி பெற முடியாத நிலையில்,  அதற்கு அடுத்த நகர்த்தலாக திருமதி சசிகலாவை ஒதுங்கி இருக்கச் செய்வதன்மூலம், அவர்தம் ஆதரவாளர்களின் வாக்குகளை .தி.மு.. - பா... கூட்டணிக்குக் கொண்டு வர லாம் என்ற ஒரு கணக்கு இதற்குள் இருக்கிறது.  சசிகலாவின் அறிக்கையை பா... பொறுப்பாளர்கள் வேக வேக மாக வரவேற்றதே இதற்குப் போதிய ஆதாரமாகும்.

ஆனால், அது தப்புக் கணக்கே!

ஆளும் .தி.மு..வில் ஏற்கெனவே பல குழப்பங்களும், கோஷ்டிகளும் பனிப் போர்களும் நடந்துகொண்டு இருக்கும் நிலையில், திருமதி சசிகலா எடுத்த இந்த நிலைப்பாடு, மேலும் அதிருப்தியையும், நம்பகமற்ற தன்மையையும் ஏற்படுத்தும். சசிகலாவை முதலமைச்சர் பதவியை ஏற் காமல் செய்தது பி.ஜே.பி. என்பதெல்லாம் அவருடைய அபிமானிகளுக்கு, ஆதரவா ளர்களுத் தெரியுமே - அது எதிர்விளைவை ஏற்படுத்தவே செய்யும். தேர்தல் பணி யில் கோஷ்டிகளும், போட்டிகளும் உச்சக் கட்டத்திற்குச் செல்லும்; தி.மு..வின் வெற்றித் திசை மேலும் பிரகாசமாகவே ஜொலிக்கும். இப்பொழுதே இவ்வளவுச் சங்கடங்கள் - இவர்கள் கையில் ஆட்சி சென்றால் என்னாகும் என்ற பொதுஜன அபிப்ராயம் மேலோங்கும். பா...வின் சித்து விளையாட்டின்மீது அடங்காக் கோபம் பீறிட்டுக் கிளம்பும் - அதனை வாக் குச் சீட்டின்மூலம் வெகு மக்கள் நிரூபிப் பார்கள் - இது கல்லின்மேல் எழுத்து!!

இந்தத் தேர்தலில் பா...வைத் தங் களின் எஜமானர்களைப் போலவே கருதி நடந்துகொள்ளும் .தி.மு..விடம் அதிக இடங்களைப் பெற்றுவிட, எது அல்லது எவர் தடையாக இருக்கிறதோ அவரை 'சற்றே விலகியிரும் பிள்ளாய்' பாடிய உத்தி, தந்திரம், வியூகமும்கூட இதில் உண்டு.

முன்பு ஜெயலலிதா என்ன சொன்னார்?

.தி.மு.. பொதுச்செயலாளர் ஜெய லலிதா அவர்கள், ''மோடியா லேடியா'' என்று கேட்டாரே, அதெல்லாம் இப்போது ''வசதியாக'' அவர்களின் அனைத்துத் தரப்பினருக்கும் (திருமதி சசிகலா உள்பட) மறந்துவிட்டதா? அதற்குக் கார ணம் வெளிப்படை - அவர்களுக்கு ஏற் படுத்தப்பட்டுள்ள சிக்கலிலிருந்து அவர வர்கள் விடுபட வேண்டிய நிர்ப்பந்தம் - அவர்கள் அனைவருக்கும் - இப்படி பலப்பல!

''சந்நியாசம் போகப் போகிறேன்'' என்று வீட்டை விட்டுக் கிளம்பிய ஒருவர், திரும்ப வந்து, ''அந்த சொம்பு ஏன் வெளியே கிடக்கிறது? என்று எடுத்துக்கொண்டு வீட் டிற்குள் வைத்த கதை'' ஒன்றை தந்தை பெரியார் சொல்வார்.

அதுதான் நமக்கு நினைவுக்கு வருகிறது - இக்காட்சிகளைப் பார்க்கவும், படிக்கவும் நேரிடும்போது!

உண்மையான எதிரி யார்?

குருமூர்த்தி அய்யர்கள் இந்த அம்மை யாரை ''சாக்கடையாக இருந்தாலும்''  என்று கேவலமான உவமை சொன்னபோதுகூட ஏனோ இவரது உறவுகளுக்கும், தொண்டர் களுக்கும் நியாயமாக வரவேண்டிய கோபம் வரவில்லை என்பது எதைக் காட்டு கிறது?

மாறாக, ''தி.மு..தான் எங்கள் முதல் எதிரி'' என்று கூறி, ''அதனைத் தோற்கடிக்க ஒன்று சேருங்கள்'' என்று அறிக்கை விடுகிறார்; உண்மையில் எதிரி யார்? கழகங்களே இல்லாத தமிழ் நாட்டை உருவாக்க, அண்ணா கண்ட ஆட்சிகள் உருவாகாமல் தடுக்க, ஆர்.எஸ்.எஸ்., பா... தமிழ்நாட்டில் காலூன்றும் நோக்கத்தோடு இப்படி .தி.மு..வை உடைப்பது யார்?

உண்மையான பாதுகாவலன் தி.மு..வே!

.தி.மு.. என்பதற்கு இன்று என்ன தனி அடையாளம்?

மாநில உரிமைகள், தமிழ் இனப் பண் பாட்டு அடையாளங்கள் திட்டமிட்டு பறிக்கப்படுகின்றனவே - மொழி உரிமை சிதைக்கப்படுகிறதே - கல்வியில் பச்சையாக குலதர்மம் கோலோச்சும் நிலையும் - எந்த சமூகநீதியை சட்டமாக்கினோம் என்று கூறிப் பெருமை கொண்டாடினோமோ, அதனை அடியோடு தகர்க்கும் பணிகள் இன்று மத்திய பா... ஆட்சியால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நடந்து கொண்டிருக்கும் கொடுமையைத்  தடுத்து, தனித்துவ திராவிட தமிழர் தமிழ் நாட்டு உரிமைகளுக்கு அரண் அமைப்பது- தி.மு.. என்ற மாபெரும் பாதுகாவலன் அல்லவா?

''மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் விதவையானால் திருப்தி'' என்பதுபோல நடந்துகொள்ளலாமா? ஏதாவது பொதுநலக் கண்ணோட்டமோ, இன நலக் கண்ணோட்டமோ, மக்கள் நல கண்ணோட்டமோ இதில் இருக்கிறதா?

அண்ணா பெயரில் உள்ள ஓர் ஆட்சி யின் கதி இப்படியா நிர்கதியாக ஆக வேண்டும்?

எம்.ஜி.ஆரின் கையை முறுக்கியவர்கள் அன்றைய ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் - டில்லியில்!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  (17.2.1983) முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.  கடுமையாக எச்சரித்தார் - ''இந்து மதத்தை இப்படி எல்லாம் காப்பாற்ற முடியாது; அனுபவம் என்னைத் தடை செய்யும் அளவுக்கு மட்டமாக நடந்து கொண்டார்கள். இப்படிப்பட்ட அனுபவம், கீழ்த்தரமாக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நடந்து கொண்டதுபோல் இதுவரை நடந்தில்லை'' என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர் களேகுமுறியதைஅ.தி.மு.. அறியுமா? எம்.ஜி.ஆரையே அவமதித்த - எம்.ஜி. ஆரிடமே வன்முறையைக் காட்டிய கட்சி யிடம் .தி.மு.. கூட்டணி சேருவது எந்த வகையில் சரியானது - நேர்மையானது?

இன்று அவ்வமைப்பு தமிழ்நாட்டின் .தி.மு.. அரசையும், அக்கட்சியின் அத்துணைப் பிரிவுகளையும் முறுக்கி முறுக்கி இப்படி சாசனம் தயாரித்து வெற்றி கொள்ளப் பார்க்கிறதே!

இதனைத் தமிழ்நாட்டு வாக்காளர்கள் புரிந்துள்ளனர்!

2019 மக்களவைத் தேர்தல்

முடிவு என்ன?

2019 இல் நாடாளுமன்றத் தேர்தலில் பண பலமும், பராக்கிரமப் படையெடுப்பும் படுதோல்வியே கண்டது!

தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை யில், வாக்காளர்களைப் பொறுத்தவரையில் மிகுந்த தெளிவுடனும், முடிவுடனும் இருக் கிறார்கள்.

காரணம், ஒவ்வொரு தமிழ்நாட்டுக் குடும்பமும் கொதி நெருப்பின்மேல் நின்று கொண்டுள்ள நிலையே எதார்த்தம்!

விலைவாசி ஏற்றம், வறுமை, வேலை யில்லாத் திண்டாட்டம், இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து, மகளிருக்குப் பாதுகாப்பின்மை போன்ற தாங்கொணாக் கொடுமைகளும், அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிய ஊழ லும், லஞ்சமும் தலைவிரித்தாடும் நிலை; இல்லத்தரசிகளின் வற்றாத கண்ணீர் - இவற் றைப் போக்கிட இப்போதுள்ள .தி. மு.. - பா... கூட்டணியை வீழ்த்த மக்கள் தாங்களே பாயும் 'ஏவுகணைகளாக' மாறு வதை எவராலும் தடுத்துவிட முடியாது!

பிரிந்தவர்கள் இணைந்து நின்றாலும், .தி.மு.. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு ஒருபோதும் கிட்டாது!

1999 இல் ஜெயலலிதா

சொன்னது என்ன?

ஜெயலலிதா இருந்தபோதே அவர் பா...வுடன் கூட்டணி அமைத்துத் தோல்வி ஏற்பட்ட இக்கட்டான அனுபவங் களை மனதிற்கொண்டே - ''என் வாழ்நாளில் நான் ஒரு தவறு செய்துவிட்டேன். அதற்காக வருந்துகிறேன். இனிமேல், எக்காலத்திலும் அந்தத் தவறைச் செய்யமாட்டேன்'' என்று சென்னைக் கடற்கரையில், மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாநாட்டில் (1999 இல்) பகிரங்கமாகப் பேசினார். (அவருடைய உரை அச்சிட்ட நூலாகவே உள்ளது.

அதை மீறி, அவரே பா...வுடன் கூட்டு சேர்ந்து, படுதோல்வி அடைந்தார். தி.மு.. கூட்டணி பெரு வெற்றி பெற்றது.

அதில் கற்றுக்கொண்ட அரசியல் பாடத் தின் காரணமாக, பிரதமராக வந்த மோடி வற்புறுத்தியும் கூட்டுச் சேர மறுத்தார்.

அதனால்தான் அவரது கடைசி தேர்தலில் ''மோடியா? லேடியா?'' என்று தேர்தல் மேடைகளில் முழங்கினார்.

ஆரியம் வீழும் - ஆரியத்தின் அம்புகளும் வீழும் - உண்மைத் திராவிடம் வெல்லும்!

இதை மீறித்தான் இப்போது ''அம்மா ஆட்சி'', ''ஜெயலலிதா ஆன்மா'' பேசும் இவர்கள், அவர் நிலைப்பாட்டுக்கு முற் றிலும் எதிராக இப்படி ஒரு அடிமைச் சாசனம் எழுதுகின்றனர்! அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொண்டு - தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இப்படி பா...வுக்கு நடைபாவாடை விரிக்கின்றனர்!

தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் கற்பிப்பிப்பது உறுதி! முற்றிலும் உறுதி!!

திராவிடம் வெல்லும்!

ஆரியம் விழும் - ஆரியத்தின் அம்பு களும் விழும்!

உண்மைத் திராவிடம் வெல்லும்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

5.3.2021

Comments