‘திராவிடப் பொழில்’ - ஒரு வரலாற்றுப் பொன்னேடு

நேற்றைய (11.3.2021) தொடர்ச்சி...

டாக்டர் மாத்வி பொட்லூரி - ஒரு மனித உரிமைப் போராளி. பேச்சுரிமை, கருத்துரிமைக் களங்களில் சிறப்பாக பணியாற்றி வருபவர். கனடாவில் வான் கோவர் நகரில், ‘தெற்காசிய மனித நேயச் சங்கத்தின் வெளியுறவுச் செயலாளராகத் தற்போது பணியாற்றி வருகிறார். இந்தியா, நார்வே முதலான நாடுகளில் உள்ள மனித நேய அமைப்புகளோடு டாக்டர் மாத்வி பொட்லூரி நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு மனித உரிமைகளைப் பேணிக் காக்கும் பணியில் பெரும் பங்காற்றி வருகிறார், அறிவியல் மனித சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருபவர்.

Quest To Breaking The Caste Barriers in India and Across the World' - என்னும் ஆய்வுக் கட்டுரையில் மாத்வி பொட்லூரி, இந்தியாவிலும் உலகின் வேறு சில நாடுகளிலும் நிலவி வருகின்ற ஜாதிகளை உடைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்கிறார். உலகில் உள்ள எல்லாப் பெண்களும் ஒரே தாயிடமிருந்து ஒரே வகையான மரபணு மூலக் கூறுகளைப் பெற்றவர்கள் ஆவார்கள். இதுவே மனிதர் அனைவரையும் ஒன்றிணைக்கும் கூறாக விளங்குகிறது. ஆனால் இந்தியாவில் ஜாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் மக்கள் பிரிக்கப்பட்டுப் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள் என்பதை மாத்வி பொட்லூரி விளக்குகிறார். இந்து மத நூலாகியமனுஸ்மிருதிதான் இத்தகைய பிரிவினைகளுக்குக் காரணம் என்று டாக்டர் மாத்வி நிறுவுகிறார். காட்டுவிலங்காண்டித் தனமான இந்த ஜாதிப்பிரிவினைகள் தீண்டாமையுடன் கை கோர்த்து நிற்கின்றன. இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவைப் போன்ற நாடுகளில் குடியேறியுள்ள மக்களிடையேயும் இந்தியாவிலும் தாழ்த்தப்பட்டவர் கள் கல்வி நிலையங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள், நாகரிகமடைந்த எந்தச் சமுதாயமும் ஜாதி முறையைப் பின்பற்றாது. ஜாதி முறை என்பது போலித்தனமானது. தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் காட் டிய வழியில், மரபணு - அறிவியலின் துணை கொண்டு ஜாதி முறைகளை நாம் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவோம்' என்று டாக்டர் மாத்வி உணர்ச் சிப் பெருக்கோடு எழுதுகிறார்.

இந்தியாவில் தற்போது இரண்டாயிரம் ஜாதிகளும் இருபத்து அய்ந்தாயிரம் துணை ஜாதிகளும் நடை முறையில் இருக்கின்றன என்பதை ஆய்வாளர் மாத்வி எடுத்துக் காட்டும் போது நாம் அதிர்ச்சிய டைந்து நிற்கிறோம். அறிவியலின் மீது நாம் கொண் டுள்ள நம்பிக்கையும் மரபணு அறிவியலின் வளர்ச்சி யும் ஜாதிமுறையை ஒழித்துக் கட்டுவதற்கு நமக்கு உறுதுணை பயக்கும் என்று தம் ஆய்வுக் கட்டுரையை ஆய்வாளர் மாத்வி பொட்லூரி முடிக்கிறார். ‘திரா விடப் பொழில்' இதழுக்கு வளம் சேர்க்கும் அருமை யான ஆய்வுக்கட்டுரை!

டாக்டர் மாத்வி பொட்லூரிக்கு நம் நன்றியும் வணக்கமும்!

பார்ப்பன மாணவர்களுக்கே பயன்பட்டது

பேராசிரியர் டாக்டர் ஜெகதீசன், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர், சென்னை பல்கலைக் கழகத்தின் மேனாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியர். தமிழ் நாட்டரசின் திட்டக்குழு உறுப்பினராக இருந்தவர், சேதுக்கால்வாய்த் திட்டத் தின் உயர் நிலைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி யவர். பன்னிரண்டு வரலாற்று நூல்களை எழுதி யுள்ளார். எண்பதுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரை களை வழங்கியுள்ளார். ஜப்பான் நாட்டிலுள்ளஒசாகா' பல்கலைக் கழகத்தின் வெளியீடாகியஆசிய-பசிபிக் ஆய்விதழின் ஆசிரியராகவும் இருந்தவர்.

சிறந்த ஆய்வாளரான டாக்டர் ஜெகதீசன், ஆங்கி லேயர் ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்திலிருந்த மொழி யியல் அறிஞர்களிடையே கீழ்த்திசை மொழிகளை ஆராய வேண்டும் என்ற கருத்து உருவான சூழ் நிலையையும், சர் வில்லியம் ஜோன்ஸ் எச்.எச்.வில்சன், மாக்ஸ் முல்லர் போன்ற அறிஞர்கள் சமஸ் கிருதத்தைக் கற்று, ஆரிய நாகரிகத்தைப் புகழ்ந்து, அது இந்தோ - அய்ரோப்பியத்தின் நீட்சி' என்று பெருமிதத்தோடு எழுதிய கருத்துகளையும் ஆய் வுக்கு உட்படுத்துகிறார்.

ஆனால் ராஜாராம் மோகன்ராய், சர் என்றிமெய்ன் போன்ற இந்திய - மேற்கத்திய ஆய்வாளர்கள், சமஸ் கிருதம் மிக உயர்ந்த மொழி என்ற மேலாண்மைக் கருத்தை ஏற்க மறுத்தனர். சமஸ்கிருத மொழிப் படிப்பிற்குச் செலவிடப்பட்ட அனைத்தும் மக்களுக்கு ஒரு சிறிதும் பயனளிக்கவில்லை; மாறாகப் பார்ப்பன மாணவர்களுக்கே பயன்பட்டது. என்றாலும் ஆங்கி லேயர் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருதக் கல்விக்குச் சிறப்பிடம் தரப்பட்டு அது பேணி வளர்க்கப்பட்டது. 'கருப்பு நிறமுடைய நாகரிகமற்ற காட்டு விலங் காண்டிகளான இந்தியர்கள் - 'வெள்ளைத் தோல் கொண்ட அழகிய அய்ரோப்பியர்கள்' என்ற அவர்க ளின் தலையாய நோக்கம் உரமூட்டி வளர்க்கப்பட்டது.

சிந்து சமவெளி நாகரிகம் - திராவிட நாகரீகமே!

1920-களில் சிந்து சமவெளி - அகழாய்வில் கண் டறியப்பட்ட நாகரிகம் வேத காலத்திற்கு முற்பட்டது; அது ஆரிய நாகரிகமல்ல; அது சிந்துசமவெளி (திரா விட) நாகரிகம் என ஆய்வுலகிற்கு அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, ‘ஆரியர்' என்ற இனக் கோட்பாடு, இந்தோ - அய்ரோப்பிய நாகரிகத்தின் தொடர்ச்சி என்ற கருத்தியலோடு முன்வைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்வந்தலியோன் பாலிய கோவ்' போன்ற ஆராய்ச்சியாளர்கள் இக்கருத்தினை ஏற்க மறுத்து, ஆரியருக்கு முற்பட்ட, வேத காலத்திற்கு முற்பட்ட, ஆரிய நாகரிகமல்லாத (சிந்து சமவெளி நாகரிகம்) திராவிட இந்தியாவின் தனிச்சிறப்பு வாய்ந்த நாகரிகம் என்பதை எடுத்துக் காட்டினர் என்பதைப் பேராசிரியர் டாக்டர் ஜெகதீசன் அவர்கள் விரிவான முறையில் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் தம் ஆய்வுக் கட்டு ரையில் விளக்குகிறார் பேராசிரியருக்கு நம் நன்றி.

பேராசிரியர் .காளிமுத்து, 1965 - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணிப் போராளியாக விளங்கி யவர். பழனி கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியரா கப் பணியாற்றியவர்; சங்க இலக்கியத்தை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்; பல ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியர், சிறந்த மொழிபெயர்ப்பாளர்; திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயற்குழு உறுப்பினர்; 1970-இல் தந்தை பெரியார் முன்னிலையில் பகுத்தறிவாளர் கழகம் தொடங்கப்பட்டபோது அதன் செயற்குழு உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். ‘குறிப்புப் பொருள் கோட்பாடுகள்', ‘மனு நீதி ஒரு மறுபார்வைமுதலான நூல்களின் ஆசிரியர், ‘உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும்', ‘3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா, ‘சிவாஜி முடிசூட்டலும் பார்ப்பனியமும்', மாட்டுக் கறியும் மதவெறியும்போன்ற நூல்களின் மொழிபெயர்ப்பு ஆசிரியர் பேரா..காளிமுத்து எழுதியுள்ளதமிழ் நாடும் தந்தை பெரியாரும்' என்ற ஆய்வுக் கட்டுரை ஏறக்குறைய 50 ஆண்டுக்கால வரலாற்றை ஆய்வு செய்கிறது.

- தொடரும்

Comments