ஏனிந்த குழப்பம்?

 தாராபுரம் தொகுதியில் பாஜக தலைவர் முருகனை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக கயல்விழி என்பவர் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்க்க கயல்விழி என்ற பெயரு டைய இரண்டு பெண்களை சுயேச்சையாக இறக்கி உள்ளனர்.  அவர்கள் இருவருமே வாக்காளர் படிவத்தில் ஒரே தொலைபேசி எண்ணைக் கொடுத்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் பி.கயல்விழி, 27 வயது. மற்றொருவர் கே.கயல்விழி,  வயது 42.  ஆனால் இருவரும் ஒரே ஆண்டில் அதாவது 2015 ஆம் ஆண்டு எம்.., பிஎட்., படிப்பை படித்து உள்ளதாகப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கே.கயல்விழி, அவருடைய பெயர் தாராபுரம் தொகுதியில் பாகம் 207 இல் வரிசை எண் 22 இல் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  ஆனால், அவர் பெயர் வரிசை எண் 22 இல் இடம் பெறவில்லை. அவருடை பெயர் இடம் பெற்று இருக்கிறதா என்று கூட சரிபார்க்காமல் அவரது வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டனர். இது எப்படி என்பது கேள்விக்குறி.

அதேபோல் கே.கயல்விழி என்ற  சுயேச்சை வேட்பாளருக்கு பேனா சின்னம் கொடுக்கப் பட் டுள்ளது. பொதுவாக பேனா சின்னம் என்றால் முழு பேனாவை  வைப்பார்கள். ஆனால், கே.கயல் விழிக்கு பேனா முனை அதைச் சுற்றி கதிரொளி போன்ற ஒன்றை புதிதாக வரைந்து சேர்த்துள்ளனர். பேனா முனை என்ன பல்பா ஒளிவட்டம் வருவதற்கு? பார்ப்பதற்குச் சூரியனைப் போன்ற தோற்றம். ஏனிந்த குழப்ப நிலை? தேர்தல் ஆணையம் கவனிக்குமா?

Comments