மகிழ்ச்சியாக வாழவேண்டுமா அதிகப் பயணம் மேற்கொள்ளுங்கள்

வீட்டினுள்ளேயே அடைந்து கிடப்பவர் களை விட அடிக்கடி சுற்றுலா செல்பவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

சுற்றுலா இதழ் ஒன்று நடத்திய ஆய்வில் பங்கேற்ற பலர் தங்கள் வீட்டில் இருந்து குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரம் தவறாமல் பயணிப்பதாகக் கூறியுள்ளனர். இவ்வாறு பயணிப்பவர்கள் பயணிக்காதவர் களைக் காட்டிலும் அதிகம் மகிழ்ச்சியாக உள்ளனர்

 வேலை, குடும்ப விழாக்கள் மற்றும் நண்பர்களைச் சந்திப்பது போன்ற செயல் கள் வாழ்க்கையின் ஒரு அறிகுறியாகக் காணப்படுகிறது இது மகிழ்ச்சியை அதி கரிக்க அதிகப் பங்களிக்கிறது. பயண அனுபவங்களின் அறிக்கையின் போது தாங்கள் சிறிய மற்றும் குறிப்பிடத்தக்க விலையைக் கொண்டிருப்பதாகக் கூறு கின்றனர் என்று வாசிங்டன்  பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர்  சமசு சென கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறிய தாவது; பங்கேற்பாளர்கள் தங்கள் வாழ்க் கையில் அதிக பயணத்தை மேற்கொண்ட தாகக் கூறினார்கள். அவ்வாறு கூறியவர் கள்  மகிழ்ச்சியான வாழ்க்கையை அனு பவித்துள்ளனர். 

அப்படி வெளியே செல்லாமல் வீட்டுக் குள்ளும் அருகிலுள்ள வேலை நிறுவனங் களுக்கும் சென்று வருபவர்கள் தங்களின் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியை அனு பவிக்கவில்லை என்று அறிந்து கொண் டோம்.

 இந்த ஆய்வில் பங்கேற்ற 500 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்  சுற்றுலாக் களை மேற்கொண்டவர்கள், நாங்கள் சுற் றுப்பயணம் மேற்கொள்ளவில்லை என்று  பதில் அளித்தவர்கள் மிகவும் குறைவா னவர்கள் மட்டுமே

'கோவிட் 19'  முழு முடக்கம் முடிந்து தற் போது பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டு வருகிறது. இப்போது இந்த ஆய்வு சுற்றுலாப் பயணிகளுக்கும் சுற்றுலாத் துறை யினருக்கும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் பயண நிறுவனங்கள் தங்குமிடங்கள் மற்றும் விமான நிறுவ னங்கள் கூட விடுமுறையின் அறிவியல் நன்மைகள் குறித்து குறியீட்டுச் சொற்களை உருவாக்கி சமூக ஊடகங்கள் மூலம் பரப்புரைகளை தொடரலாம்

 மன அழுத்தம், உடல் நிலை பாதிப்பு, குடும்ப ஆரோக்கியம் தேவைப்படுப வர்கள் குடும்பத்தோடு சிரமம் பார்க்காமல் சுற்றுலா சென்று வரலாம்.  மகிழ்ச்சியான வாழ்க்கையே நமது எதிர்கால ஆரோக் கியத்தின் மூலதனம் ஆகும்.

 

Comments