இந்தியாவில் அரசமைப்புச் சட்ட ஆட்சி நடக்கவில்லை மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

சிறீநகர், மார்ச் 28 இந்தியாவில் அரசியல் சட்டப்படியான ஆட்சி நடக்கவில்லை; பாஜக என்ற ஒரு கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரல்படியே நடக்கிறது என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல் வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.

மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், 5 மணி நேரம் விசாரணையை எதிர்கொண்ட மெகபூபா,அதன் பின்னர் செய் தியாளர்களுக்குப் பேட்டி அளித் துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“என்னுடைய முன்னோர்களின் நிலம் ஆனந்த்காக் மாவட்டத்தில் பிஜிபேந்திரா பகுதியில் இருக் கிறது. அதை நான் விற்பனை செய் திருந்தேன். இதுபற்றி அமலாக்கப் பிரிவுஅதிகாரிகள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். அந்த நிலம் முதல்வரின் நிவாரண நிதிக்காக ஒப்படைக்கப்பட்டது எனத் தெரிவித்தனர். ஆனால், அதை மறுத்தேன்.என்னுடைய கரங்கள் கறைபடியாதவை எனத் தெரிவித்தேன்.மத்திய அரசை யாரேனும் எதிர்த்தால் அவர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டை சுமத்தி குற்றவாளியாக்குவது தற்போது நடக்கிறது. அதாவது தேசத்துரோக வழக்கு அல்லது சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு போடப்படுகிறது.

இந்த நாட்டில் எதிர்க் கருத்து என்பது குற்றமாக்கப்படுகிறது. அமலாக்கப் பிரிவு, சிபிஅய், என்அய்ஏ அமைப்புகளைத் தவ றாகப் பயன்படுத்தி, எதிர்க் கட்சிகளை மவுனம் ஆக்குகின் றனர். இந்த தேசம் அரசமைப்புச் சட்டப்படி ஆளப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட் சியின் திட்டப்படி ஆளப்படுகிறது. எனினும், ஜம்மு - காஷ்மீருக் கான சிறப்பு உரிமையை மீட்கவும், மாநிலத்தின் பிரச்சனைக்காகவும் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்". இவ்வாறு மெகபூபா முப்தி கூறியுள்ளார்.


Comments