விவசாயிகளுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை? பிரதமர் மோடி விளக்கம் அளித்திட வேண்டும்.....

அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிக்கை....

புதுடில்லி. மார்ச். 22 இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்திற்குத் தீர்வு காணப்பேச்சு வார்த்தைகள் ஏன் நடத்தவில்லைஎன்று பிரதமர் மோடி விளக்கம் அளித்திடவேண்டும் என்றும், விவசாயிகளுக்கு ஆர்எஸ்எஸ்-இன்தேசப் பக்தச் சான்றிதழ்தேவை இல்லை என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாகச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் அசோக்தாவ்லே மற்றும் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் போராட்டத்திற்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளைச் சீர்குலைத் திடத் தேச விரோதச் சக்திகளும்,சமூக விரோதச் சக்திகளும் முயற்சித்துக்கொண்டி ருக்கின்றன என்று பெங்களூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாநாட்டு அறிக் கையில் கூறப்பட்டிருப்பதற்கு அகில இந் திய விவசாயிகள்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. அவ்வாறு சீர் குலைத்திடும்தேச விரோதச், சமூக விரோத சக்திகள்எவை என்பதை ஆர்எஸ்எஸ் மக்கள் மத்தியில் கூற வேண்டும்.

 சம்யுக்த கிசான் மோர்ச்சா என்பது நாட்டிலுள்ள பல்வேறு விவசாயச் சங்கங்களின் கூட்டுத்  தலைமையாகும். இந்தச் சங்கங்கள் நிலப்பிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்தியச் சக்திகளை எதிர்த்துப் போராடிய பாரம்பரியத்தைப் பெற்றிருப்பன வாகும். இவற்றுக்கு நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பே செய்திடாத ஆர்எஸ்எஸ் இயக்கத்திடமிருந்துதேசப் பக்தச் சான்றிதழ்எதுவும் தேவையில்லை.

 சம்யுக்த கிசான் மோர்ச்சா  விவசாயிகள் போராட்டத்திற்குத் தீர்வு காண அரசாங்கத்துடன் விவாதம் நடத்திட எப் போதும் தயாராக இருக்கிறது. இதற்கான சுமுகமான சூழ்நிலையையும், தீர்வு காண் பதற்கான மார்க்கங்களைக் கண்டறிவ தற்கான விவாதத்தைத் தொடக்கி வைக்க வேண்டிய பொறுப்பும் அரசாங் கத்திடமே இருக்கிறது. ஜனவரி 22 அன்று விவசாயிகளுடன் நடைபெற்ற விவாதத்தின் போது அமைச்சரவைக் குழு உறுப்பினர்கள், ஒன்றரை ஆண்டு காலத்திற்கு வேளாண் சட்டங்கள் மூன்றையும் இடைநீக்கம் செய்து வைப்பதாக முன்மொழிவினை முன்வைத்தார்கள். இதனைச் சம்யுக்த கிசான் மோர்ச்சா நிராகரித்துவிட்டது. அதன்பின்னர் இன்றுவரையிலும் அர சாங்கள் புதிய பரிந்துரைகள் எதனையும் முன்வைத்திடவில்லை. விவசாயிகளின் முக்கியமான கோரிக்கையான, கொள் முதலின் போது விவசாய விளை பொருள்களுக்குச் சி2+50 சதவீதத்துடன் (சி2+50%) குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதற்கான சட்டரீதியான உத்தரவாதத்தை அளிப்பது தொடர்பாக விவாதித்திடத் தயாராக இல்லை.

எதேச்சதிகார அணுகுமுறையை

ஏற்க முடியாது

2020ஆம் ஆண்டு மின்சாரச் சட்ட முன்வடிவை விலக்கிக்கொள்வதைப் பொறுத்தவரை, அமைச்சரவைக்கு இந்தச் சட்டமுன்வடிவைத் தொடர்ந்திட மாட்டோம் என்று முன்பு நடைபெற்ற விவாதத்தின்போது ஏற்றுக்கொண்டிருந் தது. அதனை வெளிப்படையாக அறிவித்தும் இருந்தது. ஆனால் தான் கொடுத்த உறுதிமொழியிலிருந்து பின்சென்று இப்போது, நடைபெற்றுக் கொண் டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மின்சாரத் திருத்தச் சட்டமுன் வடிவை மோடி அரசாங்கம் தாக்கல் செய்திருக்கிறது. சட்டப்பூர்வமாகச் செயல்பட வேண்டிய ஓர் அரசாங்கமானது இதுபோன்று எதேச்சதிகார அணுகு முறையுடன் நடந்து கொள்வதை ஏற்க முடியாது.  போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திடத் தொலைபேசி மூலம் ஓர் அழைப்பு போதும் என்று மோடி கூறியிருந்தார். ஆனாலும் 2021 ஜனவரி 22ஆம் தேதியிலிருந்தே போராடும் விவசாயிகளுடன் விவாதத்தை மேற் கொள்ள ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்க எவ்வித முயற்சியையும் ஏன் எடுக்கவில்லை என்பதை விளக்க வேண் டியது மோடி அரசாங்கத்தின் பொறுப் பாகும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

Comments