பாராட்டத்தக்க வேலைவாய்ப்பு தரும் கல்வி நிறுவனம்:பெரியார் பாலிடெக்னிக் மாணவர்களுக்குஅப்பல்லோ டயர்ஸ், சென்னை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு


தஞ்சாவூர், வல்லம்மார்ச் 11  பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லுரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்க்கு தொழில்நுட்பக் கல்வியை அளிப்பதோடு இக் கல்லூரி யில் சிறப்பாக செயல்பட்டு வரும் தொழிலக பயிலக இணைப்புத் திட்டத் தின்  கீழ் இயங்கி வரும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வாயிலாக  பல்வேறு  தலைப்புகளில் பல துறை களில் சிறந்து விளங்கும் மென்திறன் வல்லுநர்களின் உரைகளாடு வாழ்க்கை வழி காட்டும் திட்டம் என்ற பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.

2020 -- 2021 ஆம் கல்வி ஆண்டில்  ஆளுமை மேம்பாடு, புதிய தொழில் துவங்குவதற்கான விழிப்பு ணர்வு, உணர்வுசார் நுண்ண றிவு  மற்றும் நேர்காணலில் வெற்றி பெறும் வழிமுறைகள்  ஆகிய தலைப்புகளில்  ஆன் லைன் மற்றும் நேரடி வகுப்புகள்  மூலம் பயிற்சிகள்  நடைபெற்றன.

இப்பயிற்சி வகுப்புகள் வாயிலாக இறுதி ஆண்டு மாணவர்கள் படிப்பு முடித்த பின் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பது பற்றிய வல்லு நர்களின் அறிவுரைகளயும் ஆலோசனைகளையும் பெறுகின்றார்கள்.

இக்கல்லூரியின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையும் புகழ்பெற்ற தொழிற்சாலைகளும் இணைந்து நடத்திய

2020  -  2021   ஆம் ஆண்டிற்கான வளாக நேர்காணலில் கலந்து கொண்ட இறுதி ஆண்டு மாணவ மாணவியர்கள் வேலை வாய்ப்புகளை பெற்ற னர்.

தலைசிறந்த நிறுவனங் களான சென்னை, அப்போ லோ டயர்ஸ், கோயம்புத்தூர், சக்தி ஆட்டோ காம்பொ ணன்ட் லிமிடெட் ,   கோயம் புத்தூர் லார்சன் அண்ட் டூப்ரோ, சென்னை, நோக் கியா சொல்யூசன்ஸ்  , புதுச் சேரி, லூகாஸ் டி.வி.எஸ. லிமிடெட், சென்னை, ஆக் சல் இண்டியா லிமிடெட், சென்னை, டி.வி.எஸ். டிரை னிங் சிஸ்டம்ஸ்    மற்றும்  சென்னை, ரிக்கோ இண்டஸ்ட் ரீஸ் ஆகிய நிறு வனங்களுடன் இணைந்து வளாக நேர்காணல் நடத்தப் பட்டது. 

வளாக நேர்காணல் வாயிலாக  சென்னை, அப்பல் லோ டயர்ஸ்   நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்ற 39 மாணவர்களுக்கு முதல்வர்

டாக்டர் இரா. மல்லிகா பணி ஆணைகளை வழங்கி னார்.

வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்  தி.விஜயலெட்சுமி, இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.அய்யநாதன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Comments