ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், சென்னை:

·     பணபலமும் பொய்யுரையுமே பாஜகவின் மூலதனம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீத மாக உயர்த்திடும் மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. மசோதாவை நிலைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     அரசின் சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பங்குகள், ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள வணிகங்கள் தனியார்க்கு தாரை வார்க்கப்படுகிறது. இடஒதுக்கீட்டின் கீழ் அரசு நிறுவனங்களில் வேலை தேடும் ஒடுக்கப்பட்ட மக்களை இது பாதிக்கும். இந்திய அரசு தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த வேண்டும், குறிப்பாக அரசாங்க பயன்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் கூட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படு கின்றன. இல்லை யென்றால், இந்தப் போக்கு இடஒதுக்கீட்டையும், அதனுடனான சமூக நீதியையும் அழித்து விடும்  என்று கருநாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா சட்டமன்றத்தில் பேசினார்.

தி டெலிகிராப்:

·     மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசப்போவதாகவும், தேவைப்படின் தான் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     அசோகா பல்கலைக்கழகத்தில் கவுரவப் பேராசிரியர்களாக இருந்த பிரதாப் பானு மேத்தா மற்றும் அரவிந்த் சுப்பிரமணியன் பதவி விலகியது 'சோகமான செய்தி' என்று உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு கருத்து தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

19.3.2021

Comments