சீர்காழியில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் கடவாசல் ..குண சேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 5.3.2021 அன்று நடை பெற்றது. திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், மக்கள் அதிகாரம், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பெரியார், அண்ணல் அம்பேத்கர் பற்றாளர் கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். பெரியார் சிலையை அவமதித்தவர்களைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்குமாறு காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

Comments