லட்சக்கணக்கில் பணி இழப்பு - புதிய வேலைவாய்ப்புகள் இல்லை

பிராவிடெண்ட் பண்ட் விவகாரத்தில் வெளிவந்த உண்மை

 புதுடில்லி, மார்ச் 17-  பெரு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் பிராவி டண்ட் பண்டுகளில் 7 லட்சத் திற்கும் மேற்பட்ட கணக்கு கள் முடித்துவைக்கப் பட்டு உள்ளன. இதன் மூலம் பெரு நிறுவனங்களில் மட்டும்  வேலையிழந்தோர் ஏழு லட்சத்தை தாண்டியுள்ளது, இதன் மூலம் கரோனா முழு முடக்க காலத்தில் பெரு நிறு வனங்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பவில்லை என்ற மோடியின் பொய் அம் பலமாகி உள்ளது.

 ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக பிராவி டண்ட் ஃபண்ட் நிதி உரு வாக்கப்பட்டது.   இதில் ஊழி யர்களின் ஊதியத்திலிருந்து 12% மற்றும் பணி அளிப்போர் தரப்பில் இருந்து 12% ஆகி யவை நிதியத்தில் செலுத்தப் படுகிறது.  இந்த பணத்துக்கு வட்டி அளிக்கப்படுகிறது.

ஊழியர் பணி ஓய்வு பெறும் போதோ அல்லது பணி நீக்கம் அல்லது பதவி விலகும் போது இந்த பணத் தைப் பெற்றுக் கொள்ளலாம்.

கரோனா பாதிப்பு காரண மாக 2020-ஆம் ஆண்டு நாடெங் கும் பொது முடக்கம் அறிவிக் கப்பட்டது.  இதையொட்டி பலதரப்பட்ட அலுவலகங் கள், தொழிலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்கவில்லை.  பலரும் பணி இழக்கும் நிலை ஏற்பட்டது.

இதையொட்டி பிராவி டண்ட் ஃபண்ட் நிதியத்தின் நிலை குறித்து நாடாளுமன்றத் தில் கேள்வி எழுப்பப்பட்டது.    இதற்குத் தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் கங்க் வார் எழுத்து பூர்வ பதில் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பதிலில், “கரோனா தாக்குதல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட தால் பல நிறுவனங்கள் இயங் கவில்லை. பலர் பணி இழப் புக்கு ஆளாகினர்.    இதனால் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 71,01,299 பிராவிடண்ட் பண்ட் கணக் குகள் முழுமையாக முடிக்கப் பட்டுள்ளன.

இதே கால கட்டத்தில் 66,66,563 கணக்குகள் மட் டுமே முடிக்கப்பட்டுள்ளன.,  இதில் 2020 மார்ச் 25 முதல் மே 1 வரை மட்டும் 31,01,818 பிராவிடண்ட் ஃபண்ட் கணக்குகள் முடிக்கப்பட்டு உள்ளன. மேலும் இந்த கால கட்டத்தில் 1,27,72,120 பிராவி டண்ட் ஃபண்ட் கணக்கு களில் இருந்து பகுதி தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளது.  சென்ற ஆண்டு இதே கால கட்டத்தில் 54,42, 884 பேருக்கு மட்டுமே பகுதி தொகை அளிக்கப்பட்டது.

இந்த கணக்குகள் முடிப் பால் 2020 ஆம் ஆண்டு ஏப் ரல் முதல் டிசம்பர் வரை ரூ.73,498 கோடி பணம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.  முழு முடக்கம் அறிவித்த பிறகும் அதற்கும் சில மாத இடைவெளியில் தொடர்ந்து பேசிய மோடி பெரு நிறுவ னங்கள் தொழிலாளர்களை நீக்க கூடாது, தொழிலாளர் களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், தொழிலாளர்க ளுக்கு வேலை இழப்பு ஏற் பட்டால் இந்த அரசு சும்மா இருக்காது என்று எல்லாம் வீரவசனம் பேசி முழு முடக் கத்தில் போது வேலை இழப்பே இல்லை என்று மார்தட்டியவரின் முகத்தில் மத்திய தொழிலாளர் நலத் துறை வாரியம் கரியைப் பூசி யுள்ளது. முழு முடக்கத்தில் போது பெரு நிறுவனங்களில் மட்டும் 7 லட்சத்திற்கு மேற் பட்டோர் வேலை இழந்துள் ளனர். இதைக் கணக்கில் வைத்துப் பார்த்தான் துணை நிறுவனங்கள் மற்றும் சிறு நிறுவனங்களில் பணி புரிந்த ஒரு கோடிக்கும் மேற்பட் டோர் வேலை இழந்துள்ள னர் என்று தெரியவந்துள்ளது,

Comments