விமானத்தில் சீக்கியரை அடிக்கப் பாய்ந்த இந்துத்துவ ஆதரவாளர் கைது

சோபியா(பல்கேரியா) மார்ச் 11  கயானாவில் இருந்து பாரீஸ் வழியாக இந்தியா நோக்கி வந்துகொண்டு இருந்த விமானத்தில் சில சீக்கியர்கள் டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிகொண்டு வந்துள் ளனர். அப்போது அந்த விமானத்தில் பயணித்த இந்துத்துவ ஆதரவாளர் ஒருவர் திடீரென்று  மோடி ஜிந்தாபாத் என்று கூச்ச லிட்டுக் கொண்டு சீக்கியர்களைத் தாக்கியுள் ளார்.

இதை எதிர்பார்க்காத சீக்கியர்கள் எங் களுக்குள் பேசிக்கொள்கிறோம், அதற்கு கூடவா உரிமை இல்லை உங்கள் அராஜகத்தை எல்லாம் எங்களிடம் காட்டவேண்டாம் என்று எச்சரித்த போதும் விடாமல் தொடர்ந்து தாக்க ஆரம்பித்துள்ளார். இதனை அடுத்து விமான பணியாளர்கள் அவரை சமாதானப் படுத்த முயன்ற போது அவர்களையும் தாக்கியுள்ளார். இதனை அடுத்து அந்த விமானம் பல்கேரியாவின் சோபியா நகரத்தில் அவசரகால விதிமுறை களுக்கேற்ப தரை இறக்கப் பட்டு இந்துத்துவ ஆதரவாளர் கைதுசெய்யப்பட்டார்.

அதன் பிறகு  பல்கேரியாவில் இருந்து சுமார் 3 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் மீண்டும் டில்லி புறப்பட்டது. டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து விமானப் பயணங்களில் அவ்வப்போது பரப்புரைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது, சமீபத்தில் மும்பையில் இருந்து துபாய் வழியாக ஜெர்மன் சென்ற விமானத்தில் சிலர் விவசாயிகளின் போராட் டம் அப்போ ராட்டத்தில் இருக்கும் உரிமை மீட்பு போன்ற வற்றை பிரென்சு, ஜெர்மன் மற்றும் பஞ்சாபியில் பாடல்களாக பாடி பலரின் கவனத்தை ஈர்த்தனர்.  ஆனால் இரண்டு சீக்கியர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்ததை ஒட்டுகேட்ட இந்துத்துவ ஆதரவாளர் மோடி ஜிந்தாபாத் என்று கூச்சலிட்டுகொண்டு சீக்கி யர்களைத் தாக்கியுள்ளார். இதன் மூலம் இந்துத் துவ ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட மன நோயா ளிகள் நிலைக்குச் சென்றுவிட்டனர் என்று இந்த நிகழ்வை நேரில் அலைபேசி மூலம் படம் எடுத்த அவ்விமானத்தில் பயணித்த ஒரிசாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் அந்த காட்சிப் பதிவோடு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.  


Comments