அசாமில் மகாஜோட் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் பாஜக கூட்டணி தோற்கப் போவது உறுதி...

திஸ்பூர், மார்ச் 28 அசாமில் பாஜக - அசாம் கணபரிஷத் கூட் டணியை, காங்கிரஸ்- இடதுசாரி களை உள்ளடக்கிய மகா கூட் டணி (விணீலீணீழீஷீt) தோற்கடிக்கும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் நம் பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பூபேஷ் பாகேல் மேலும் கூறியிருப்பதாவது:

குடியுரிமைத் திருத்தச் சட்ட நிலைப்பாட்டைப் பொறுத்த வரை, அசாம், மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய ஒவ்வொரு மாநி லத்திற்கும் ஒவ்வொரு நிலைப் பாட்டை பாஜக எடுத்துள்ளது. பாஜக அரசின் இந்த வெவ்வேறு நிலைப்பாடுகள், மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள் ளது.குடியுரிமைத் திருத்தச் சட்ட பிரச்சனையில், அசாம் முழுவதும் பாஜகவுக்கு வலுவான எதிர்ப்பு உணர்வு உள்ளது. இந்த சட்டத் துக்கு எதிராகத்தான் மாநிலம் முழுவதும் ஓராண்டாக போராட் டம் நடைபெற்றது. ஏனெனில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது அசாம் தான். தங்களின் கலாச்சாரம் மற் றும் அடையாளத்திற்கு குடியுரி மைத் திருத்தச் சட்டம் ஆபத்து என்பதை மக்கள் அறிவார்கள்.

இதுதவிர, அசாம் மக்களுக்கு ஏற்கெனவே கொடுத்த வாக்குறு திகளை பாஜக நிறைவேற்றவில்லை. இந்த வகையிலும் தாங்கள் ஏமாற்றப்பட்டு இருப் பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அர சாங்கத்தின் நடவடிக்கைகளில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லாததால் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். தேர்தல் மூலம் பாஜகவைத் தண் டிக்க முடிவு செய்து விட்டனர்.

அசாம் சட்டமன்றத் தேர்தலில், பாஜக-வுக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான மகாகூட்டணி 100-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் எனகருத்துக் கணிப் புகள் தெரிவிக்கின்றன. ஆனால், எண்களைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. பெரும்பான்மை இடங்களைக் நாங்கள் வெல்வோம் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும் என்றார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image