மறைவு

1940களில் "விடுதலை" துணை ஆசிரியராக  பணியாற்றிய  நிலவு.பூ.கணேசனுடைய இணையர் பூ..பழநியம்மாள்

(அகவை 94) நேற்று (10.3.2021) இரவு 10 மணிக்கு இயற்கை எய்தினார். 

மறைந்த அம்மையார் 1957ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.. உறுப்பினர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தவர். நிலவு. பூ.கணேசன் - பழநியம்மாள் திருமணம் 1943இல் தந்தைபெரியார் தலைமையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது .அம்மையார் இறுதிக்காலம் வரை திராவிட சுயமரியாதைத் தத்துவங்களை ஏற்று வாழ்ந்தவர்.

நிலவு.பூ.கணேசன் சிதம்பரம் வட்டம் ரிஜிஸ்ட்தார் பூவராகன் அவர்களின் மூத்த மகன் ஆவார். அரசின் குடும்பக்கட்டுப்பாடுத் துறையில் மாநில துணை இயக்குநர், அரசின் செய்தி விளம்பரத் துறை மற்றும் பெரியார் நூற்றாண்டு விழா கமிட்டியின் தனி அலுவலராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார்.  

Comments