செய்தியும், சிந்தனையும்....!

கண்மூடும் பூனையின் மனநிலை!

*           தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2279 பேருக்குக் கரோனா தொற்று - 14 பேர் உயிரிழப்பு.

>>           ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு - ஏதோ கரோனாவே முழுவதும் ஒழிந்து விட்டது போன்ற மனப்பான்மை (Mindset) வெகுமக்களுக்கு இருக்கிறது.

                கண்மூடும் பூனை பூலோகம் இருண்டு விட்டது என்று நினைத்ததாம்!

மூளைநல்லாதான் வேலை செய்கிறதோ!

*           மணப்பாறை .தி.மு.. வேட்பாளரின் பொக்லைன் ஓட்டுநர் வீட்டு வைக்கோல் போரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல்.

>>           மூளையின் ஆற்றலோ ஆற்றல்!

தேர்தல் அல்ல - யுத்தம்!

*           சட்டப்பேரவைத் தேர்தல் பா...வுக்கு எதிரான யுத்தம்.

                 - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு

>>           பா... என்றால் அது கொண்டிருக்கும் பிற்போக்கு மதவாதச் சிந்தனைக்கு எதிரான போர் என்று பொருள்.

இளமை - புதுமை!

*           முதன்முதலாக வாக்களிக்கப் போகும் இளைஞர்களின் கருத்து என்ற போர்வையில், இளமை - புதுமை என்ற தலைப்பில் இளைஞர்களின் கருத்துகளை வாங்கி வெளியிட்டுள்ளதுஇந்து தமிழ்திசை.'             

>>           புதிய வாக்காளர்கள் தி.மு.. கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற ஒன்றைத் திணிப்பதுதான் இந்தக் கூட்டத்தின் உள்நோக்கம்.

பலே, பலே!

*           அமெரிக்காவில் முதன்முதலாக திருநங்கையான டாக்டர் ரேச்சல் லெவின் துணை சுகாதார அமைச்சராக நியமனம்.

>>           முதலாளித்துவ நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் இது நடந்திருக்கிறது - இந்தியா கண் திறக்கட்டும்!

கப்பல் கவிழப் போகிறது

*           பா... ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்.

- பியூஷ் கோயல் உறுதி

>>           தற்கொலைக்கு ஒப்பந்தம்.

சங்கிகளின் காதில் விழுந்து விடப் போகிறது - எச்சரிக்கை!

*           நிலவில் விவசாயம் செய்ய உதவும் பாக்டீரியாவினைக் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி சயீத் அஜ்மல்கான் பெயரை சூட்டியது அமெரிக்காவின் நாசா.

>>           வெளிச்சத்துக்கு வராத விஞ்ஞானியின் பெயர் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image