தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் என்று ஆகி விட்டதே!

ஈரோடு (கிழக்கு, மேற்கு) - எடப்பாடி தொகுதிகளில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை

ஈரோடு, மார்ச் 27- தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; அதிமுக ஆட்சியில். அனைத்துத் துறைகளிலும் ஊழல் என்று ஆகி விட்டதே! எனவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என ஈரோடு (கிழக்கு, மேற்கு) - எடப்பாடி தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர் குறிப்பிட்டார்.

ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதிகளில் பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமகன் ஈவெரா, ஈரோடு மேற்கு தொகுதி தி.மு..வேட்பாளர் சு.முத்துச்சாமி ஆகியோரை ஆதரித்து ஈரோடு

வீரப்பச்சத்திரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கு.சிற்றரசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மா.மணிமாறன் வரவேற் புரை வழங்கினார்.

கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், கழக பொதுச்செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரைக்குப் பின் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார். அவர் தமதுரையில்,

அரசு சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொண்டு உங் களுக்கு பணியாற்றுவேன் என்று தம்பி திருமகன் ஈவெரா சொன்னது என்னை மிகவும் கவர்ந்தது. இவரது தாத்தா .வெ.கி.சம்பத் அவர்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சொத்தை விற்று விற்று போட்டியிடுவார்கள். பெரியார் குடும்பத்தின் சிறப்பு இது.

தேர்தலுக்கு முன்னாள் அமைந்த கூட்டணி இது. எங்களுக்கு தேர்தலும் ஒரு களம். உங்களது கூட்டணியின் நிலை என்ன? காலில் விழுந்து கிடக்கின்றீர்களே? காரணம் மடியில் கனம் வழியில் பயம்.

இப்போதும் பணத்தை நம்பியிருக்கும் நீங்கள் தோற்பது உறுதி.கலைஞர் காலத்தில் 184 இடங்கள் கிடைத்தது வரலாறு என்றால் இப்போது தளபதி ஸ்டாலின் அவர்கள் காலத்தில் 234 இடங்களிலும் தி.மு.. வெற்றி பெறுவது உறுதி. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை இந்த ஆட்சியில். அனைத்து துறைகளிலும் ஊழல் என்று ஆகிவிட்டதே!

எனவே ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் திருமகன் ஈவெரா அவர்களை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் .பி.ரவி, மாநகர தி.மு..செயலாளர் மு.சுப்பிரமணியம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் .வெ.கி..இளங்கோவன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம், மண்டல தலைவர் பிரகலாதன், கோவை மண்டல தலைவர் கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன்,கார்த்திக் ராம்கன், பிரகாசன்,தி.மு..பகுதி செயலாளர் நடராசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் காமராஜ், மாநில தி.மு..இலக்கிய அணி செயலாளர் ஈரோடு இறைவன், சி.பி.அய்.மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்

எடப்பாடி தொகுதியில் பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் எடப்பாடி தொகுதி தி.மு‌..வேட்பாளர் .சம்பத்குமார் அவர்களை ஆதரித்து எடப்பாடி நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கா.நா.பாலு, மாவட்ட துணைத் தலைவர் இராமலிங்கம் வரவேற்புரை வழங்கிட, பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் சண்முகம், மண்டல தலைவர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம், மண் டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கை.முகிலன், காமராஜ், சத்தியநாதன், நகர தலைவர் நாகராஜன், நகர செயலாளர் ரவி, துணை செயலாளர் கார்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், கழக பொதுச்செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரைக்குப் பின் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார். அவர் தமது உரையில்,

தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறோம். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறப் போகிறது. எடப்பாடி தொகு தியை இந்தியாவே எதிர்பார்க்கிறது.

இளைஞர் சம்பத்குமாரை வெற்றிபெறச் செய்யுங்கள். கொத்தடிமைகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்று நமது செல்வகணபதி அவர்கள் சொன்னார்கள்.அதுதான் உண்மை.நாங்கள் பா...வை இந்த மண்ணில் பெரியார் மண்ணில், காலூன்ற விட மாட்டோம் என்று கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சொன்னார்களே! விவசாயிகள் வஞ்சிக்கப்படும் அள விற்கு புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்திய போது எதிர்த்து கேட்டார்களா? கூட்டணி யில் இருந்து கொண்டு இடங்களை பெற்றவர்கள் நாங்கள் தான் ஆட்சியை அமைப்போம் என்று சொல்லும் போதாவது தட்டிக்கேட்க வேண்டாமா? எனவே சம்பத் குமார் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பரப்புரை கூட்டத்தில் தி.மு..மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கணேசன், காங்கிரஸ் கட்சி தலைவர் நாகராஜன், தி.மு..நகர செயலாளர் பாட்ஷா, ...பொறுப்பாளர் முகம்மது ரயீஸ், ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர் இராதாகிருஷ்ணன், திராவிடர் தமிழர் கட்சி நிர்வாகி செல்வமுருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.

மேற்கண்ட கூட்டங்களில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேக ரன், பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேரா..சுப்பிரமணியம், மாநில மாணவர் கழக செய லாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாண வர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, மாநில அமைப்புச் செயலாளர்கள் மதுரை செல்வம், ஊமை ஜெயராமன் மற்றும் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image