முஸ்லிம் நாடுகளின் ஆதரவுக்காக இலங்கை புர்கா தடை விவகாரத்தில் பின்வாங்கியது

கொழும்பு, மார்ச் 18- அய்நா மனித உரிமை கவுன்சில் வாக் கெடுப்பில் முஸ்லிம் நாடுக ளின் ஆதரவு தேவைப்படுவ தால், புர்கா தடை விவகாரத் தில் இலங்கை அரசு பின் வாங்கியது.

இலங்கையில் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்த லாக இருப்பதால், முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமை யாக மூடும் புர்காவுக்கு தடை விதிக்க இருப்பதாக அந் நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். இத்தடைக்கு அமைச் சரவை ஒப்புதல் அளித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு, இலங்கைக் கான பாகிஸ்தான் தூதர் கண்டனம் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் இதுபிரித் தாளும் நடவடிக்கைஎன குற்றம்சாட்டிய அவர், ‘இது, முஸ்லிம்களின் மத உணர்வை புண்படுத்துவது மட்டுமின்றி, இலங்கையில் சிறுபான்மையினருக்கான அடிப்படை மனித உரிமை மீறலுமாகும்,’ என்றார்.

இலங்கை உள்நாட்டு போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அய்நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில், முஸ்லிம் நாடுகளின் ஆதரவை கோரி வருவதால், புர்கா தடை விவகாரத்தில் இலங்கை   பின்வாங்கியுள்ளது.

இது பற்றி அமைச்சரவை செய்தி தொடர்பாளரான மூத்த அமைச்சர் கேகிலியா ராம்புக்வெலா கூறுகையில், ‘‘ஆலோசனை நடத்தி, ஒரு மித்த கருத்து ஏற்பட்ட  பிறகு நடவடிக்கை எடுப்போம். புர்காவுக்கு தடை விதிப்பதில் இலங்கை அரசு அவசரம் காட்டாது,’’ என்றார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image