புதுச்சேரியில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா

புதுச்சேரி, மார்ச் 13 புதுச்சேரி மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையாரின் 102ஆவது பிறந்த நாள் நிகழ்வு 10.3.2021 அன்று காலை 10 மணியளவில் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

அன்னை மணியம்மையாரின் படத்துக்கு திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு மாலை அணிவித்தார். மணியம்மையார் பிறந்த நாள் அன்று பெரியார் படிப்பகத்தில் கழகக் கொடி ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமை தாங்கினார்.

புதுச்சேரி மண்டல தலைவர் இரா.சடகோபன், புதுச்சேரி மண்டல அமைப்பாளர் இர.இராசு, பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் புதுச்சேரி மண்டல கழக துணைத் தலைவர் வீர.இளங்கோவன், புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், வில்லியனூர் கொம்யூன் கழக தலைவர் கரு.சி. திராவிடச்செல்வன், உழவர்கரை நகராட்சி கழக தலைவர் சு.துளசி ராமன், பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, புதுச்சேரி கழக மேனாள் செயலாளர் வே.அன்பரசன், கழக பொறுப்பாளர்கள் .கண்ணன், மு.குப்புசாமி, மகளிரணி தோழர் கல்பனா துளசி ராமன், களஞ்சியம் வெங்கடேசன் .முகேஷ். கமலாபுரம் சந்திர சேகரன், தருமபுரி மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர் சி.அறிவழகன், .சிவராசன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திராவிடச் செல்வன் இனிப்பு வழங்கினார்.

 புதுச்சேரி மண்டல தலைவர் இரா.சடகோபன் நன்றி நவின்றார்.

Comments