பெரியாரை விரட்ட உங்களால் முடியாது; நீங்கள்தான் விரட்டப்படுவீர்கள்!

சென்னை புத்தகக் காட்சி - நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை

சென்னை, மார்ச் 5- பெரியாரை விரட்ட உங்களால் முடியாது; நீங்கள்தான் விரட்டப்படுவீர்கள்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நூல் வெளியீட்டு விழா

'டெக்கான் கிரானிக்கலில்' பணியாற்றும் பாபு ஜெயகுமார் அவர்களால் எழுதப்பட்ட "Periyar E.V. Ramasamy A Man Ahead of His Time" எனும் 253 பக்கங்களில் 20 தலைப்புகளில் உருவான நூல் 'எமரால்டு' பதிப்பகத்தினரால் பதிப்பிக்கப்பட்டது. அந்நூலின் வெளியீட்டு விழா சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சி அரங்கில் 28.2.2021 அன்று பிற்பகல் 3.45 மணியளவில் நடைபெற்றது.

விழாவிற்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்று உரை யாற்றினார்.

அவரது உரை வருமாறு:

வரலாற்றுப் பெருமை மிகுந்த ஓர் அருமையான உலக இலக்கிய வரலாற்றிலும், அறிவியல் வரலாற் றிலும் இடம்பெறப் போகக்கூடிய ஒரு சிறந்த இறுதிப் பட்டியல் என்று வருமானால், அதில் இடம் பெறவேண்டிய புத்தகமாக நவில்தொறும் நூல் நயம் என்று சொல்லக்கூடிய அந்தச் சிறப்பை தன் னுடைய அகத்தை உள்ளடக்கிய ஓர் அற்புதமான ஆங்கில நூல் "Periyar E.V. Ramasamy A Man Ahead of His Time" என்ற தலைப்பில் மிக அரு மையாக இன்றைக்கு சிறந்த பத்திரிகையாளரும், நல்ல ஆங்கில எழுத்தாளருமான அன்பிற்குரிய சகோதரர் ஜி.பாபு ஜெயக்குமார் அவர்கள் எழுதி யுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்துள்ள, எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் அவர்களுக்கு இன்றைக்கு நிறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடாகி இருந்தன டில்லியில்; அதையெல்லாம் மற்றொரு நாளைக்கு ஒத்தி வைத்துவிட்டு, டில்லியிலிருந்து புறப்பட்டு இந்த நிகழ்ச்சிக்கு நேரிடையாக வந்திருக்கிறார். எங்களு டைய அன்பான வேண்டுகோளை ஏற்று வந்திருக் கிறார். அவர் சடங்காக, சம்பிரதாயமாக இந்நிகழ்ச் சிக்கு வரவில்லை. சரித்திர நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமையப்போகிறது என்பதற்கு அடை யாளமாகத்தான் - இவர்  உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது இரு பெரும் புரட்சியாளர்களைத்தான். ஒருவர் தந்தை பெரியார், இன்னொருவர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அந்தக் கொள்கைகளை வகுத்துக் கொண்டு, மனிதத்தை எல்லா இடங்களிலும் பரப்பக் கூடிய அந்தப் பணி செய்து கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பையும் பெற்று, மிக அருமையான உரையாற்றிய எனது அருமைச் சகோதரர் திராவிட இயக்கத்தின் மூன் றாவது குழல்; இரட்டைக் குழலோடு, மூன்றாவது குழலாக என்றைக்கும் நிழலாக இருக்கக் கூடிய அன்பிற்குரிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிறந்த சிந்தனையாளரும், ஆய்வாளரு மான எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவள வன் அவர்களே,

அதேபோல, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பான வகையில் ஓர் அருமையான உரையை சுருக்கமான நேரத்தில், மிக அருமையாக ஆற்றிய வர் - ‘பெரியார்' திரைப்படத்தை - ஒரு தேசிய விருது பெற்ற திரைப்படமாக ஆக்கக் கூடிய அள விற்கு - இன்றைக்கு பல மொழிகளில் அந்தத் திரைப்படத்தை மொழியாக்கம் செய்து மிகப்பெரிய அளவிற்கு வெற்றி கண்டிருக்கக்கூடிய இயக்கு நரும், சிறந்த படைப்பாளியுமான அன்பிற்குரிய அருமைச் சகோதரர் ஞானராஜசேகரன் அய்..எஸ். அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு, சிறப்பான வகை யில் முதலில் இந்த நூலினைப் பெற்ற - ஜெர்மனியில் இன்றைக்கு அவர் வாழ்ந்தாலும், தமிழ்நாட்டினு டைய உறவோடு, மலேசியநாட்டினுடைய உற வோடு உலகம் முழுவதும் இருக்கக் கூடிய தமி ழர்கள் எல்லாம், ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என்று சொல்லக்கூடிய அளவிற்கு உணர்வைப் பெற்றிருக்கக் கூடிய அருமைத் தோழர் டாக்டர் கே.சுபாஷினி அவர்களே,

மிக சிறப்பான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, இந்தப் புத்தகம் வெளிவருவதற்குக் காரணமாக இருக்கக்கூடிய எமரால்டு பதிப்பக உரிமையாளர் அன்பிற்குரிய நல்லினி - ஒளிவண்ணன் அவர்களே,

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களே, பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே, கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை உறுப்பினரும், பெரியார் நூலகப் பதிப்பகத்தினுடைய நிர்வாகியாக இருக்கக் கூடிய அருமைத் தோழர் டி.கே. நடராசன் அவர்களே,

இங்கே குழுமியுள்ள அனைத்து இயக்கங்களைச் சார்ந்த, இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட மற்றும் ஊடகவியலைச் சார்ந்த அருமைப் பெரியோர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் யாருக்கு உரியார்?

‘‘பெரியார் ஓர் ஆயுதம்'' என்று சொன்னார்கள்; பெரியார் காலத்தை வென்றவர் என்பதைத்தான் தலைப்பாக எடுத்துச் சொன்னார்கள்.

பெரியார் என்ற தத்துவம் உலகம் எங்கும் பரவலாக இன்றைக்குப் பின்பற்றப்படக் கூடிய தத்துவமாக இருக்கிறது.

பெரியார் யாருக்கு உரியார்? இந்தக் கேள்வி மிக முக்கியமானது.

நரியாரைத் தவிர, பெரியார் அனைவருக்கும் உரியார் என்பதுதான் மிகவும் முக்கியமானது.

முதல் பகுத்தறிவுவாதியான புத்தர்!

பெரியார் சிறந்த தத்துவ ஞானி என்பது அவருக் காக அல்ல - அவர் மிக அருமையான தன்னிலை விளக்கமாகச்  சொன்னார். எந்தத் தலைவரும் சொல்லாத அளவிற்கு.

"எனக்கு எந்த தெய்வீக அம்சமும் கிடையாது. அந்தச் சாயத்தைப் பூசிவிடாதீர்கள். நான் ஒரு சாதாரண மனிதன் அவ்வளவுதான். என்னை நீங்கள் பெரிய பகுத்தறிவுப் பகலவன் - பெரிய அறிவாளி என்றெல்லாம் புகழலாம்; ஆனால், நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - 200 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவன் வந்து, ‘‘இராமசாமி என்ற ஒரு பிற்போக்குவாதி இருந்தான்'' என்று சொன்னால், நான் அதிசயப்படமாட்டேன். காலம் அவ்வளவு விரைவாக, புரட்சிகரமாக வரும் என்று சொன்ன ஒரே தலைவர் - சிந்தனையாளர்  தந்தை பெரியார் அவர்கள்!

"நம்பு, நம்பு, நம்பு - நம்பாவிட்டால் நரகத்திற்குப் போகவேண்டும்" என்று சொன்ன ஒரு நம்பிக் கையையே அடிப்படையாகக் கொண்டு, இன்றைக் கும் இடமாற்றிக் கொண்டிருக்கின்ற சனாதனச் சமு தாயத்திலே, ஒரு நாட்டிலே முதல் குரல் - அவரு டைய குரல் - நம்பாதே என்பதுதான்!

"நம்பாதே" - அதற்கு முன்பு இதை சொன்னவர், முதல் பகுத்தறிவுவாதியான புத்தர்.

உன்னுடைய முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக நம்பாதே - அவர்கள் எழுதினார்கள் என்பதற்காக நம்பாதே - அவர்கள் நடந்தார்கள் என்பதற்காக நம்பாதே- உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ, அதன்படி செய் என்று சொன்ன தலைவர் - சிந்தனையாளர் அவர்.

அதுபோலவே, இங்கு திருவள்ளுவரைப்பற்றி மிக அழகாகச் சொன்னார்கள்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பெரியாரை விரட்ட உங்களால் முடியாது; நீங்கள்தான் விரட்டப்படுவீர்கள்!

அதே கோணத்தில் பகுத்தறிவுக்கு மரியாதை கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள். அதை மக்களிடத்தில் சொல்லிச் சென்றவர். மற்றவர்கள் எழுதினார்கள், பேசினார்கள். பவுத்தத்தை விரட்ட முடிந்தது; ஆனால், பெரியாரை விரட்ட உங்களால்  முடியாது; நீங்கள்தான் விரட்டப்படுவீர்களே தவிர, பெரியாரை ஒருபோதும் விரட்ட முடியாது.

ஏனென்றால், உங்களுக்கே தெரியாது பெரியார் எங்கே இருக்கிறார் என்று. பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி - அதைத்தான் இந்த நூலில் பல கோணத்தில் அருமையாக எழுதியிருக்கிறார்.

இந்த அரங்கம், நூல் அறிமுக அரங்கம். அந்த நூலை வாங்கவேண்டும்; படிக்கவேண்டும்; இளைய தலைமுறையினருக்குக் கொடுக்கவேண் டும். ஆங்கிலத்திலே பெரியாருடைய வாழ்க்கை வரலாறு. ஒரு சிறந்த வாழ்க்கை வரலாறு. எல்லா வற்றையும், எல்லா கோணத்திலேயும் தெரிந்து கொள்ள முடியவில்லையே என்று சொல்லுகின்ற நேரத்தில், ‘பெரியார்' திரைப்படத்தின்மூலம் ஒரு பெரிய விழிப்புணர்வை உலகளவில் ஏற்பட்டது.

அதுபோல, இங்கே வெளியிடப்பட்ட "Periyar E.V. Ramasamy A Man Ahead of His Time" மிக அற்புதமான ஒரு பணியை ஒரு சிறிய காட்சியில் தந்திருக்கிறது.

பெரியாருடைய பணி எப்படிப்பட்டது?

பேரறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாள் விழாவில் பேசும் பொழுது சொன்னார்கள். பெரியாருடைய பணி எப்படிப்பட்டது என்று சொன்னால்He was putting Centuries in to a Capsule  என்று சொன்னார்கள்.

‘‘பல நூற்றாண்டுகளில் தன்னுடைய பணிகளை ஒரு சிறிய குளிகைக்குள் அடக்கியதைப் போல'' என்று. அதை அருமையாக எடுத்துக்காட்டியதுதான் இந்த நூல். அதற்கு விளக்கம் வேண்டுமா? அது தான் பாபு ஜெயக்குமார் எழுதியிருக்கின்ற இந்த அருமையான நூலாகும்.

மிகச் சரியாக இந்நூலில் பல செய்திகளைச் சொல்லியிருக்கிறார். ஆங்கிலமும் சிறப்பானது - அதன் நடையும் சிறப்பானது. அதேநேரத்தில், இங்கே சகோதரர் எழுச்சித் தமிழர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, இந்தப் புத்தகத்தின் தலைப்பு முறை மிகச்சிறப்பான தலைப்பு முறை யாகும்.

Born Rebel

Try with Congress

Battling Brahminocracy

நண்பர்களே, பள்ளிக்கூடத்தில் நான்காவது வகுப்பிற்கு மேலே படிக்காத பெரியார். அதனால் தான் நமக்கெல்லாம் ஒரு பெரியார் கிடைத்தார். படித்திருந்தால், பட்டதாரியாகியிருப்பார். படித்தி ருந்தால், நிர்வாகி ஆகியிருப்பார். ஆனால், துணிந்து சிந்திக்கக்கூடிய ஒரு ஆற்றல்மிகுந்த சிந்தனை இமயமாக, எதிர்நீச்சல் வீரராக அவர் ஒருபோதும் இருந்திருக்க முடியாது.

1924 இல் குருகுலப் போராட்டம் அந்தக் கால கட்டத்தில் உச்சக்கட்டத்திற்குப் போனது. அதைப் பற்றியெல்லாம் இங்கே விரிவாகச் சொல்லவேண் டிய தேவையில்லை. ஏனென்றால் இந்த அரங் கத்தில் இருக்கின்றவர்களுக்குத் தெரியும்.

மனிதத்தை உருவாக்குகின்ற பணி!

பெரியாருடைய இயக்கத்திற்குப் பெயர் - உலகத்தில் வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லாத ஒரு பெயர் Self Respect Movement - சுயமரியாதை இயக்கம். சுயமரியாதை யாருக்கு? மனிதனுக்கு. பெரியாருடைய பணி எப்படிப்பட்ட பணி? மனி தத்தை உருவாக்குகின்ற பணி!

He wants to humanize the human being. இதுதான் இந்த புத்தகத்தினுடைய தத்துவம்because already the society in which he has born, the society he was facing the society and people he wanted to change the dehumanize, from dehumanization he wants to bring the transformation into Rehumanization.

மனிதர்களைப் பார்த்தார் - மனிதர்களைத் தேடினார் - மனிதர்கள் உருவத்தில் இருந்தார்கள் - ஆனால், உணர்வில் இல்லை. ‘‘மானமும், அறிவும் தான் மனிதனுக்கு அழகு'' என்று சொன்ன பெரியார், அந்த மானத்தையும், அறிவையும் மனிதருக்கு உண்டாக்குவதில்கூட - அந்த மனிதத்தைத் தேடித் தான் ஏற்பாடு செய்தார்.

காலத்திற்குப் பின்னால் ஓடிப் போகிறவராக பெரியார் ஒருபோதும் இருந்ததில்லை.

இதை அவர் சிந்தித்த காரணத்தினாலே, ஒரு சுய சிந்தனையாளர் என்ற காரணத்தினாலே, காலத்தைத் தாண்டி சிந்தித்தார்கள். காலம் அவரு டைய காலடியில் இருந்ததே தவிர, காலத்தின் காலடியிலோ  அல்லது காலத்திற்குப் பின்னால் ஓடிப் போகிறவராக பெரியார் ஒருபோதும் இருந்த தில்லை. அதைத்தான் நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஆங்கிலத்தில் Visionary என்ற ஒரு வார்த்தை உண்டு;  Visionary மட்டுமல்ல; ஒரு பெரிய Missionary-யும்கூட அவர். யாராவது கையெழுத்துப் போடச் சொன்னால், தந்தை பெரியார் நாலணா கேட்பார். நாலணா கொடுத்தால்தான் கையெழுத்து போடுவார். ஆனால், இயக்க வெளியீடுகளான புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்து, புத்தகத்தில் கையெழுத்துப் போடுமாறு, புத்தகத்தையும், நாலணாவையும் கொடுத்தால், புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு, நாலணாவைத் திருப்பிக் கொடுப்பார்.

எல்லோரும் படிக்கவேண்டும் என்று

தந்தை பெரியார்  நினைத்தார்

எல்லோரும் அதிசயப்படுவார்கள். புத்தகம் வாங்கியிருக்கிறீர்களா - அதுபோதும்; தனியே நாலணா தேவையில்லை என்று சொல்வார். காரணம், எல்லோரும் படிக்கவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் நினைத்தார்.

அதைத்தான் சற்று நேரத்திற்கு முன் சகோதரர் எழுச்சித் தமிழர் அவர்கள் சொன்னார்.

எல்லோரும் படிக்கக்கூடாது என்று  ஒரு சமுதா யத்தில் தடை இருந்தது. இதுபோன்று உலகத்தில் எந்த சமுதாயத்திலாவது உண்டா? எந்த மதத்திலா வது உண்டா?

மனிதனாகப் பிறந்தவர்களுக்கு  அறிவு அற்றங்காக்கும் கருவி. அந்த அளவிற்கு அறிவைப் பயன்படுத்தவேண்டிய ஒரு சமுதாயத்தில், படிக்காதே, படிக்கக் கூடாது என்று சொன்னார்கள்.

- தொடரும்

Comments