வன்முறையை எப்படி நடத்தலாம்என்று செயல்படும் பா.ஜ.க.

 கொல்கத்தா, மார்ச். 10- தமிழக தேர்தலுடன் மம்தா முதல்வ ராக உள்ள மேற்கு வங்கத்தில் எட்டுக் கட்டங்களாக தேர் தல் நடக்க இருக்கிறது.

இங்கு பாஜக மற்றும் திரிணாமுல் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது, தேர்தலில் வன் முறை ஏற்படுவதை தவிர்க்க மொத்தமுள்ள 294 தொகுதி களுக்கு எட்டு கட்டமாக பிரித்து ஒவ்வொரு கட்டத் திலும் 35 முதல் 40 தொகுதி களுக்கு மட்டுமே வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணை யம் முடிவு செய்துள்ளது.

மார்ச் மாதம் 27ஆம் தேதி மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் நடக்க இருக் கும் நிலையில் இங்கு தேர்தல் வேலைகள் அனல் பறக்க தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஆரம்பூர் அருகில் உள்ள கோசபா பகுதியில் உள்ள பாஜக தேர்தல் மண்டல பிரச் சார அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து பாஜக தொண்டர் ஒருவர் உயிரிழந் தார், மேலும் 6 பாஜக தொண்டர்கள் கவலைக்கிட மாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணையில் வெடிகுண்டு செய்யும் முயற்சியில் ஈடு பட்டிருந்த போது நடந்த விபத்தில் அவர் உயிரிழந்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு நடந்த வீட்டின் பின்புறத்தில் நாட்டு வெடிகுண்டுகள் குவியலாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் வன் முறையை ஏவிவிட பாஜக வெடிகுண்டுகளை தயாரித்த தாக கோசபா பகுதி திரிணா முல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்த் நஸ்கர் கூறினார்.

தேர்தல் நடைபெறும் மாநி லங்களில் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு எவ்வாறான நலத் திட்டங்களை வாக்குறுதியில் சேர்த்து அதை ஆட்சிக்கு வந் தால் நடைமுறைப்படுத்தலாம் என்று வழிமுறைகளை ஆய்வு செய்துகொண்டு இருக்கும் போது பாஜகவினர் வெடி குண்டை தயாரித்து வன் முறைக்கு வழிவகை செய்து கொண்டு இருக்கின்றனர்.

Comments