மோடியின் கையில் சிக்கித் தவிக்கும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார்!!

 திருவெறும்பூர் தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர்

திருவெறும்பூர், மார்ச் 22- திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொடர்சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

திருவெறும்பூர் தொகுதி தி.மு..வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து நேற்று (21.3.2021) பெருந்திரளான மக்களிடையே நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் மண்டல செயலாளர் ஆல்பர்ட், மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், காட்டூர் கிளை செயலாளர் சங்கிலி முத்து, ஒன்றிய செய லாளர் தமிழ்ச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை வருமாறு: கலைஞர் அவர்களின் வியூகம் எப்படி வெற்றிப்பாதை அமைத்ததோ அதேபோல் நடைபெறவுள்ள தேர்தலில் நமது தளபதி ஸ்டாலின் அவர்கள் சிறப்பான முறையில் வியூகம் வகுத்துள்ளார். இந்த ஆட்சி எந்த வகையிலும் செயல்பாடு இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

இந்த தேர்தலை மாற்றத்திற்கான கருவியாக மக்கள் கையில் எடுத்துள்ளார்கள்.

இப்போது கரோனாவுக்கான காலமாக இருக்கிறது. கையை தட்டினால், விளக்கு ஏற்றினால் கரோனா போகும் என்றால் போய்விடுமா? இப்படி சொன்ன மத்திய ஆட்சி யாளர்கள் கையில் தான் மாநில அரசு சிக்கித் தவிக்கிறது.

இந்த மண் பெரியார் மண். காமராசர் ஆட்சி செய்த மண்.அண்ணா ஆட்சி செய்த மண்.

கலைஞர் ஆண்ட மண். நாளை இன்னும் ஒரு மாதத்தில் நமது தளபதி ஸ்டாலின் அவர்கள் ஆளப்போகின்ற மண்.

தி.மு..வின் வாக்குகளை எப்படி பிரிக்கலாம் என்று சூழ்ச்சி செய்கிறார்கள்!

கல்வி என்பது மாநில உரிமை. அதை ஒத்திசைவு பட்டி யலில் சேர்த்ததை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் தி.மு.. ஆட்சி அமைத்தால் தான் முடியும்.

குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி கொண்டு வர முயற்சி செய்தார். அப்படி ஒருவேளை வந்திருந்தால் நாங்களெல் லாம் சட்டம் படித்திருக்க முடியுமா? உங்கள் பிள்ளைகள் டாக்டருக்கு படித்திருக்க முடியுமா? இப்போது மீண்டும் புதிய வடிவத்தில் கொண்டுவர பார்க்கிறார்கள்.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் வர இருக்கிறது.அதை கண்டித்து இந்த ஆட்சியாளர்கள் கேட்டதுண்டா? கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறார்கள்.

சர்வீஸ் கமிஷன் குழுவில் தமிழ்நாட்டை சேராதவர் வந்ததுண்டா? இன்றைக்கு வடநாட்டை சேர்ந்தவர்கள் ரயில்வே துறையில் ஆக்கிரமித்துள்ளார்களே?

எனவே இதற்கெல்லாம் முடிவுகட்ட ஒரு விடியல் பெற தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.. கூட்டணி கட்சிகளை வெற்றிபெற செய்யுங்கள்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

தி.மு..பகுதி செயலாளர் நீலமேகம், மேனாள் சேர்மன் சாந்தகுமாரி சாலமன், திமுக பொறுப்பாளர் முத்து, ஆதித் தமிழர் பேரவை செங்கை குயிலி, .யூ.மு.லீக் மாவட்ட செயலாளர் ஹபீப் ரகுமான் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி யினர் கலந்து கொண்டனர்.முடிவில் திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

பரப்புரை பயணக் கூட்டத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், ஒருங்கிணைப்பாளர் பேரா..சுப்பிர மணியம், மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

Comments