நூல் விமர்சனம்
இமயத்தைச் சிதறடித்தார் பெரியார் - மா.பால்ராசேந்திரம்
விலை: ரூ. 150
பதிப்பகம்: மா.பால்ராசேந்திரம் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), எண். 9/118, தந்தை பெரியார் இல்லம், தூத்துக்குடி மாவட்டம், சிவகளை
- 628 753, செல்: 9443593367
வர்ணா சிரமத்தின் பேரால் ஜாதி - தீண்டாமை கொடுமைகள் அந்தக் காலத் தில் எவ்வாறெல்லாம் தலைவிரித்தாடியது என்பது பற்றியும், கல்வி, வேலை வாய்ப்பு களில் “ஒரு குலத்துக்கொரு நீதி” - மனு நீதி என ஏற் படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை களை பார்ப்பனர்கள் பறித்ததைப் பற்றி யும், சாஸ்திர, சம்பிரதாயங்கள், மூடச் சடங்குகள், பழக்க வழக்கங்களின் பேரால் சமுதாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும், பெண்ணுரிமை, சொத்துரிமை, மற்ற பிற உரிமைகள் எல்லாம் யாரால் மறுக் கப்பட்டது என்பது பற்றியும் விளக்கமாக ஆதாரங்களுடன் விவரிக்கிறது இந்நூல்.
இவற்றை எல்லாம் எதிர்கொண்டு தந்தை பெரியார் அவர்கள் வாழ்நாளெல் லாம் போராடி எப்படித் தகர்த்தெறிந்தார் என்பதையும், பார்ப்பனியத்தை அடித் தளத்திலிருந்து பெயர்த்தெடுத்து எவ்வாறு ஆதிக்கத்தை சிதறடித்தார் - ஆரியத்தைக் கதறடித்தார் என்பதையும் விளக்கும் - சிந்திக்க வைக்கும் சீரிய நூல்.
- பெரு.இளங்கோ
பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்
- ஈரோடு தமிழன்பன்
விலை: ரூ. 160
வெளியீடு: விழிகள் பதிப்பகம், 8/எம்.139, 7ஆவது குறுக்கு தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை-41, செல்: 9444265152
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் வாழ்ந்த பாரதியாரெனும் கவிதை சகாப்பதத்தின் வழித்தொடராய், தமிழ்ப் பணியைத் தரணி வாழ் மக்களுக்கு எடுத்துச் சென்றவர் பாரதிதாசன். பாரதி யாரோடு பழகியவர்கள் பலர் அவரது கவிதா மண்டலத்தில் இருந்தாலும், பாரதி யாரின் வாரிசாக அறியப்பட்டவர் பாரதி தாசனன்றி வேறு ஒருவர் இல்லை என்பது யாவரும் அறிந்த உண்மை.
பாவேந்தர் பாரதிதாசனோடு, தான் மட்டுமின்றி தமிழன்பர்கள் அனைவரை யும் பத்து ஆண்டுகள் உடன் அழைத்து செல்கிறார் ஈரோடு தமிழன்பன் அவர்கள். இந்த சிந்தனையின் தொடர்ச்சியாக பார திதாசனோடு பத்து ஆண்டுகள் நூலை, இன்றைய தமிழர்களும் நல்லுலகில் உள் ளோர் அனைவரும் வாசிக்க வேண்டும். 36 தலைப்புகளில் பாரதிதாசன் அவர்க ளோடு ஏற்பட்ட தொடர்புகளை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூல் ஆசிரியர்.
இஸ்லாத்தில் இல்லறம்
- ஷேக் முஹம்மத் காரக்குன்னு
விலை ரூ. 275
வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை-600012.
சமூகத்தின் மிகச்சிறிய, ஆனால் முக்கி யமான உறுப்பு குடும்பம் ஆகும். திருமண உறவின் மூலமாகவே அது வடிவம் கொள் கிறது. பொருத்தமான இல்லறம் தான் பக்கு வமான தலைமுறைக்குத் தொட்டில் கட்டு கிறது. குடும்ப உறவுகள் சிதையுமேயானால் சமுதாய அமைப்பே நிலைதடுமாறிப் போய்விடும். ஆக்கப்பூர்வமான சமுதாய அமைப்புக்கு உறுதியான குடும்ப உறவு கள் தவிர்க்க முடியாதவை ஆகும்.
இஸ்லாத்தில் இல்லறம் குறித்த தகவல் களை 30 கட்டுரைகளில் எடுத்துரைத்தும், அதன் வழிமுறைகளையும், இல்லற வாழ் வின் எல்லா கிளைகளையும் இணைத்துத் தொகுத்து வகுத்து இதுபோல் ஒரே பிரிவில் சொல்லியிருப்பது அரிதினும் அரிதே.
இல்லற வாழ்வில் இணைந்து இருப்ப வர்களும் இணைய இருப்பவர்களும் கட்டாயம் இந்த நூலைப் படிக்க வேண்டும். இஸ்லாம் கூறும் இல்லற நெறி எத்தனை அழகானது என்பதை விளக்குகிறது. படித்துப் பாருங்கள். தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் சென்று சேர உதவுங்கள்.
நலம் காக்கும்
நாட்டு மருத்துவம்
அரிமா அ.தொல்காப்பியன் பி.எஸ்சி. எம்.ஏ.,
விலை: ரூ. 100
வெளியீடு: வனிதா பதிப்பகம், 11 நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை-17, தொலைபேசி:
044-42070663.
”நலம் காக்கும் நாட்டு மருத்துவம்“ என்ற நூலில், உடலையும் உள்ளத்தையும், செம்மைப்படுத்த இயற்கை உணவு வகைகளை உண்ணவும், இயற்கை முறை யில் எளிய மருத்துவத்தை கடைப்பிடிக் கவும் இயற்கை உணவே மருந்தாகவும் அமைவது குறித்து அரிய குறிப்புகளைப் கொண்ட இப்புத்தகம் பயனுள்ளதாகவும் அமையும் வகையில் 149 தலைப்புகளில் நலம் காக்கும் மருத்துவ குறிப்புகளையும் அதனுடைய விளக்கத்தையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் நூல் ஆசிரியர்.
இயற்கை பல்வகை மூலிகை, மருத்துவ வழிகாட்டியாகப் படிப்போர் அனைவ ருக்கும் பயன்படவும், அவசரகால ஓட்டத் தில் நம்மை நாம் மீட்டெடுக்க, நம்மை நாம் தற்காத்துக்கொள்ள, நம்மை நாம் பாது காக்க நம்மால் இயன்ற சில ஆலோசனை களை வழிமுறைகளை ‘நலம் காக்கும் நாட்டு மருத்துவம்‘ என்ற நூலின் மூலம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ, வழிகளை கடைப்பிடித்து வாழ பயன்படும்.