ஏட்டுத் திக்குகளிலிருந்து...

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·             பாஜகவைச் சேர்ந்த காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தவறான பதிவுகளை படிக்காமல் மற்றவர்களுக்கு அனுப்பும் அளவிற்கு அவர் கல்வியறிவற்றவரா? என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கேள்வி எழுப்பினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பிய ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டிக் கேட்பது தொடர்பான சர்ச்சையை அடுத்து, ஏப்ரல் 2018இல் சேகர் பகிர்ந்த ஒரு அவதூறான இடுகையைப் பற்றிய வழக்கில் நீதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

·             சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான கொலைகள், கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை மீதான கட்டுப்பாடுகள், ஊழல் மற்றும் மத சுதந்திர மீறல்களை சகித்துக்கொள்வது உள்ளிட்ட பல குறிப்பிடத் தக்க மனித உரிமை பிரச்சினைகள் இந்தியாவில் உள்ளன என்று அமெரிக்க அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.

தி டெலிகிராப்:

·             மேற்கு வங்கம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி தனது பரப்புரையின் இறுதியில் தேசிய கீதம் பாடி, ஒரு நிமிடம் காயம்பட்ட காலுடன் எழுந்து நின்றார். ஏழு முறை மக்களவை உறுப்பினராகவும், இரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தா பானர்ஜி, வேறு எந்த தேர்தலிலும் இந்தளவு தான் பிரச்சாரம் மேற்கொண்டதில்லை என்றும் தெரிவித் தார்.

- குடந்தை கருணா

31.3.2021

Comments