கென்யாவில் ஆடுமேய்த்துக் கொண்டு இருந்த சிறுவன் நெதர்லாந்தில் மீட்கப்பட்டார்


கென்ய
தலைநகர் நைரோபி விமான நிலையத்தின் ஓரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த 16 வயது சிறுவன் அங்கே நின்றுகொண்டு இருந்த விமான சக்கரம் ஒன்றின் வழியாக விமானத்தில் விளை யாட்டாக ஏறியுள்ளார்.

  ஆனால் அவர் அங்கிருந்து கீழே இறங்க வழிதெரியாமல் இருந்த போது விமானத்தை விமானிகள் இயக்க ஆரம் பித்துவிட்டனர்.

 இதனை அடுத்து அந்தச்சிறுவன் லேண்டிங் கியர் என்ற பகுதியிலேயே அச் சத்தில் தங்கிவிட்டான்.

இது தொடர்பாக ' கார்டியன்' வெளி யிட்டுள்ள செய்தியில் நைரோபியில் இருந்து  நெதர்லாந்தில் உள்ள மாஸ்டிசண்ட் விமான நிலையதிற்கு வந்த விமானத்தை பராமரிப்பாளர்கள் சோதனை செய்த போது அங்கே மயக்கமடைந்த நிலையில் லேண்டிங் கியர் பகுதியில் ஒரு சிறுவன் இருப்பதைக் கண்டு அவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த விமானம் துருக்கி மற்றும் ஜெர்மன் விமான நிலையங்களில் நின்ற போது கூட அச்சிறுவன் இறங்க முயலவில்லை.

அந்தச் சிறுவன், கடுமையான உடல் வெப்பக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டதாகவும் The Guardian கூறியது. அந் தச் சிறுவன், கடத்தப்பட்டிருக்கும் சாத்தியம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விமா னத்தைத் தரையிறக்க உதவும் கருவியில் ஒளிந்திருந்து பயணம் செய்வோர் உயிர் பிழைக்கும் சாத்தியம் மிகவும் குறைவு.

அவர்கள் உறைந்துபோய் அல்லது உயிர்வாயுப் பற்றாக்குறையால் இறந்து விடுவர். இவர் நிறைய உணவுப் பண்டங் களை தன்னுடன் எடுத்துவந்துள்ளார்.  ஆப்பிரிக்காவில் பல்வேறு நாட்டு விமான நிலையங்களில் பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளன. இதுபோன்ற காரணங்களால் பலர் லேண்டிங் கியர் பகுதியில் ஏறி விமானம் பறக்கும் போது உடல் சிதைந்தோ அல்லது பசியால், கடுமையான குளிரினால் அல்லது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்து விடுகின்றனர். ஆனால் இவர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்.

Comments