தென் இந்திய நல உரிமைச் சங்கமும் ‘ஜஸ்டிஸ்’ நாளிதழும்

இந்திய தேசிய காங்கிரசில் பார்ப்பனர்களின் நிரந்தர ஆதிக்கத்திற்கு அடிக்கல் நாட்டுவதை உடைத்தெறிந்து தென் இந்தியர்களின் உரிமைகளை காப்பதற்கென 1916 நவம்பர் 21-இல் சர்.பிட்டி தியாகராயர் SOUTH INDIAN LIBRAL FEDERATION     என்னும் ஓர் அமைப்பை தோற்றுவித்தார் அதைத்தான் தமிழில்தென் இந்திய நல உரிமைச் சங்கம்என்று அழைக்கப்படுகிறது.

தென் இந்திய நல உரிமைச் சங்கத்தின் வரவு செலவு நிர்வாகத்தை கவனிப்பதற்கு தென் இந்திய தேசிய மகாஜன சபை (SOUTH INDIAN PEOPLE ASSOCIATION)  என்ற ஒரு துணை நிறுவனம் அமைக்கப்பட்டது. இதன் பொறுப்பில்தான் ஆங்கிலம் தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் முறையே ஜஸ்டிஸ், திராவிடன், ஆந்திரபிரகாசிகா என்ற பெயர்களில் நாளிதழ்கள் வெளியிடப் பட்டு வந்தன. இதற்கு தேவையான நிதி திரட்டும் வேலையும் இந்த நிறுவனமே கவனித்து வந்தது. ஒரு பங்கு நூறு ரூபாய் வீதம் அறுநூற்று நாற்பது பங்குகளை கொண்ட ஒரு மூலதனத்துடன் இந்த நிறுவனம் செயல்பட ஆரம்பித்தது. ரூபாய் நாற்பதாயிரத்தைக் கொண்டு அச்சு இயந்திரங்கள் வாங்கப்பட்டன. எஞ்சிய பணத்தை கொண்டு மவுண்ட் ரோட்டில் சொந்தக் கட்டடம் ஒன்று வாங்கப்பட்டது. இதற்கு தேவைப்பட்ட அதிகப்படியான பணத்தைக் கட்சியில் ஆர்வத்தோடு செயலாற்றிவந்த ராஜா ரங்கராவ் பகதூர் என்ற டேலாப்பூர் ஜமீன்தாரர் கடனாகக் கொடுத்து உதவினார். (எக்ஸ்ரே ..கருணாகரன் - கட்டுரை)

104 ஆண்டுகளுக்கு முன்பு 1917 பிப்ரவரி 26-லிருந்து JUSTICE என்ற ஆங்கில நாளிதழை அச்சிட்டு வந்ததின் காரணமாக தென் இந்திய நல உரிமைச் சங்கத்தை ஆங்கிலத்தில் JUSTICE PARTY என்றும் தமிழில்நீதிக்கட்சிஎன்றும் அழைக்கப்பட்டு வருகின்றது.

பார்ப்பனரல்லாதார் நலன்களைப் பேணும் பத்திரிக்கைகளுக்கான ஓர்“The South Indian Peoples Association Ltd’அமைப்பாக தோன்றியது. இதன் சார்பில் வெளிவந்த ஆங்கில நாளேட்டின் பெயர்தான்ஜஸ்டிஸ்’ (Justice).

இந்த இதழுக்குஜஸ்டிஸ்என்று பெயர் சூட்டியவர் டாக்டர் டி.எம்.நாயர். இவர் பிரெஞ்சு நாட்டின் டாக்டர் க்ளெமான்ஸோவிடம் மருத்துவப் பயிற்சி பெற்றவர். டாக்டர் க்ளெமான்ஸோலாஜஸ்டிஸ்  எனும் பத்திரிகையை நடத்தியவர். இதழின் பெயர் நாயரைக் கவர்ந்தது. எனவேஜஸ்டிஸ்எனும் பெயரிட்டார். ‘இந்தியன் பேட்ரியட்இதழின் ஆசிரியர் கே.கருணாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்திஇந்தியன் பேட்ரியட்இதழை வாங்கி அதற்குஜஸ்டிஸ்  என பெயர் வைத்து கருணாகரனுக்கு மாத ஊதியமாக ரூபாய் 350 - 400 அளிப்பது என்றும் பேசப்பட்டது. ஆனால்ஜஸ்டிஸ்இதழ் வெளிவருவதற்கு 6 நாட்களுக்கு முன்பு கருணாகரன் பின்வாங்கி விட்டார். பெசன்ட் அம்மையார், சிபி.ராமசாமி அய்யர், கேசவப்பிள்ளை ஆகியோர் தூண்டுதல் காரணமாக கருணாகரன் பின்வாங்கி விட்டார் என்று கூறப்படுகிறது. (நீதிக்கட்சியும் தோற்றமும்  ... கே.பரமசிவம் - 1968, .81)

எதிர்பாராத திடீர் சிக்கலை விடுவிக்க டாக்டர் டி.எம்.நாயர் தாமே ஆசிரியராக பொறுப்பேற்க முன்வந்தார். எவ்வித ஊதியமும் எதிர்பார்க்காமல் ஆசிரியரானார். மெட்ராஸ் ஸ்டாண்டர்ட் இதழின் முன்னாள் ஆசிரியர் பி.என்.ராமன் பிள்ளை, தமிழஞர் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, முன்னாள் திருநெல்வேலி இந்து கல்லூரியின் துணை முதல்வர் - துணை ஆசிரியர்களானார்கள்.

சென்னை மக்களின் கல்வி, சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்துக்கு பொதுவாகவும், இந்து சமுதாயத்தின் பிராமணரல்லாதாருக்கு குறிப்பாகவும் ஜஸ்டிஸ் இதழ் பாடுபடும்என்று இதழின் பதிப்பாளரும் வெளியிடுபவருமான தியாகராயர் (செட்டியார்) அறிக்கை வெளியிட்டார்.

முதல் நாளிதழ் 12 பக்கங்களுடன் மாலை இதழாக 1917 பிப்ரவரி 26 முதல் வெளிவரத் தொடங்கியது.

ஜஸ்டிஸ்இதழின் செல்வாக்கு காரணமாகதென்னிந்திய நல உரிமை சங்கம்என்னும் அசல் பெயருக்குப் பதிலாகஜஸ்டிஸ் பார்ட்டிஎனும் பெயர் (நீதிக்கட்சி) புழக்கத்தில் நிலைத்து விட்டது

Comments