தஞ்சையில் கழக இளைஞரணி நடத்திய "திராவிடம் வெல்லும்" சிறப்புக் கூட்டம்


 தஞ்சை, மார்ச்  10- தஞ்சாவூர் .பூபதி நினைவு பெரியார் படிப்பகம், அன்னை மணியம் மையார் நூற்றாண்டு அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி சார்பில்  "திராவிடம் வெல்லும்" என்கிற தலைப்பில் சிறப்புக்கூட்டம் 29.02.2021 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞ ரணி தலைவர் ரெ.சுப்பிர மணியன் தலைமையேற்று உரை யாற்றினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் .விஜயக் குமார், திருவையாறு ஒன்றிய இளைஞரணி தலைவர் .மோகன் ராஜ், தஞ்சை ஒன்றிய இளைஞரணி செயலா ளர் .இரமேஷ், தஞ்சை ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளர் .பாரதி தேவா, தஞ்சை மாநகர இளைஞ ரணி துணைச் செயலா ளர் .பெரியார்செல்வன்,  ஆகியோர் முன்னிலை யேற்று சிறப்பித்தனர். தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல்,  கலந்து கொண்டு தொடக்க வுரையாற்றினர். தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு .இராமலிங்கம், தஞ்சை  மாவட்ட செயலாளர் .அருணகிரி, பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் கோபு.பழனிவேல், திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து இளைஞர்களிடம் எடுத்துக்கூறி கருத்துரை யாற்றினர்.  திராவிடர் கழக பேச்சாளர் வழக்கு ரைஞர் பூவை. புலிகேசி கலந்துகொண்டு சிறப் புரை யாற்றினார்.

இறுதியாக இளைஞரணி தோழர் யாழினி நன்றியுரையாற்றினார்.

இக்கூட்டத்தில் மாநில பகுத்தறி வாளர் கழக தலைவர் மா.அழகிரிசாமி, மாநில கலைத் துறை செயலாளர் .சித்தார்த்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் .அழகிரி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் பொன்னரசு, திருவையாறு ஒன்றிய தலைவர் .கண்ணன், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், பூத லூர் ஒன்றிய தலைவர் அள்ளூர் இரா.பாலு, திராவிடர் கழக தோழர் குழந்தை கவுதமன், நாகை மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் பி.சுரேஷ்,  படிப்பகத்தின் தொடர் வாசகர்கள் குழந்தை சாமி, முருகானந்தம், இளை ஞரணி தோழர்கள் ஜான் பிரிட்டோ, ரோகித், களிமேடு ஹரிசுதன், செந்தில் குமார், மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Comments