திராவிடர் கழகத் தலைவர் பேசிய பொதுக்கூட்டத்தில் கல்வீச்சு

சென்னை, மார்ச் 27 தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நட வடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கை வெளியிட வேண் டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது.  ஒரே கட்டத்தில் நடத்தி  முடிக்கப் படும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறும்.

மொத்தமுள்ள 234 தொகுதி களிலும் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்த வேட்பாளர்களில் 3,585 பேர் ஆண்கள், 411 பேர் பெண் வேட்பாளர்கள், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 2 பேரும் போட்டியிடுகின்றனர்.

 தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து தகுதியுள்ள வாக் காளர்களும் வாக்களிக்க ஏதுவாக தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

எனினும், கடந்த காலங்களில் இதுபோன்ற உத்தரவுகளை சில நிறுவனங்கள் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.  இந்நிலையில், தேர்தல் தினத் தன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவ னங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Comments