மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு

 மும்பை, மார்ச் 12- இந்தியாவில் கோவிட்-19 நோய் தொற்று பரவலுக்குப் பிறகு வாகனம் வாங்கும் நடத்தை மற்றும் மாறிவரும் கண்ணோட்டங்கள் மீதான புரிதலை குறிக்கோளாகக் கொண்ட ஆய்வு முடிவுகளை ஆட்டோ மீடியா அமைப்பான கார்வேல் (Carwale) வெளியிட்டிருக்கிறது.

அதில் மின்சார வாகனங்களில் அதிகரித்து வரும் ஆர்வத்தையும், சொந்தமாக வாங்குவதில் புதிய மாடல்களை பரிசீலிப்பதன் விருப்பத்தையும் மற்றும் ஆன்லைன் முறையில் வாங்குவதில் வெகுவாக உயர்ந்து வரும் ஆர்வத்தையும் இந்த சர்வே முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன என கார்வேல் நிறுவன தலைமை செயல் அலுவலர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.

Comments