முகக் கவசத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய நடைப்பயிற்சி!

 

 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு 14.3.2021 அன்று இரவு திருச்சி பெரியார் மாளிகையில் தங்கினார்.

வழக்கம்போல 15.3.2021 அன்று காலை  பெரியார் கல்வி வளாகத்தில் நடைப்பயிற்சிக்குச் சென்றார். பெரியார் கல்வி வளாக வாயிலிலேயே தமிழர் தலைவரைச் சந்தித்து சீரிய பகுத்தறிவாளரும், முன்னாள் டி.ஆர்..வுமான தங்க.நல்லுசாமி அவர்கள் வழக்கம்போலவிடுதலை' சந்தாக்களை வழங்கினார்.

நாகம்மையார் குழந்தைகள் இல்ல வளாகத்தில் மாணவிகளைச் சந்தித்த தமிழர் தலைவர், முகக் கவசம் அணியாத மாணவிகளை முகக்கவசம் அணிந்து வரச் சொல்லியும், முகக்கவசத்தை சரிவர அணியாத மாணவிகளை சரியாக அணியும்படி வலியுறுத்தினார்.

தோட்டக்காரர்கள், தூய்மைப் பணியாளர்கள், முதியோர் அனை வருக்கும் முகக்கவசம் அணியவேண்டிய முக்கியத்துவம்பற்றி விளக் கினார்.

ஒரு மனிதனுக்கு வேட்டி, சட்டை, பேண்ட் ஆகியவை எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முகக் கவசம் மிகவும் முக்கியம்.

வேட்டி, சட்டை, பேண்ட் அணியாமல் வெளியில் செல்ல முடியுமா? அதுபோலத்தான் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லக்கூடாது.

பெரியார் கல்வி வளாகத்தில் மாணவர்களின் பெற்றோரைப் பார்த்த தமிழர் தலைவர், அவர்களில் சிலர் முகக்கவசம் சரியாக அணியாமல் இருந்ததை கவனித்து, அவர்களை அழைத்து  முகக்கவசத்தை சரியாக அணியும்படி சொன்னார்.

முகக்கவசம் அணியாத சிலருக்கு, தனது வாகனத்திலிருந்து முகக் கவசத்தை எடுத்து அணியும்படி கொடுத்தார்.

இன்றைய நடைபயிற்சி முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்து வதாக அமைந்திருந்தது.

Comments