சேலம்-விருத்தாசலம் சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

சேலம், மார்ச் 16 கரோனா ஊரடங்கு காரணமாக ஓராண்டாக நிறுத்தப்பட்ட சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரயில் நேற்று (15ஆம் தேதி) முதல் சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் வாழப்பாடி மற்றும் தலைவாசல் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான, சேலம்-விருத்தாசலம் வழித்தடத்தில் சேலம்- சென்னை எழும்பூர் விரைவு ரயில், பெங்களூரு- காரைக்கால் பயணிகள் ரயில், சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரயில் உள்ளிட்ட பல ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சேலம்- விருத்தாசலம் வழித் தடத்தில் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், ஓராண்டு இடை வெளிக்குப் பின்னர் சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில் நேற்று (15.3.2021) முதல் சிறப்பு விரைவு ரயிலாகஇயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையமான சேலம் டவுன் ரயில் நிலையம் நேற்று திறக்கப் பட்டது. ரயில் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.30இல் தொடங்கி ரூ.45, ரூ.55, சேலம்-விருத்தா சலத்துக்கு கட்டணம் ரூ.60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ரயில் அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, தலைவாசல், மேல்நாரியப்பனூர், சிறு வத்தூர், கூத்தக்குடி ஆகிய இடங்களில் நிற்காது எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம்-விருத்தாசலம் ரயிலை, வழக்கம் போல அனைத்து இடங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.


Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image