வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய இழப்பு நடவடிக்கையை கைவிட தொழிற்சங்கம் வலியுறுத்தல்

 சென்னை, மார்ச் 22 வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய இழப்பை ஏற் படுத்தும் நடவடிக்கையைக் கை விட வேண்டும் என தொழிற்சங்கத் தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அரசு போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்கு நர்களுக்கு, ஏஅய்டியுசி சார்பில் அனுப் பப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது:

14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் 25, 26, 27 ஆகிய நாட்களில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடந் தது.

இந்த நாட்களுக்கான விடுப்பை எவ்வாறு தீர்மானிப்பது என பின்னர் முடிவு செய்யலாம் என தொழிலாளர் துறையுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வேலைநிறுத்த நாட்களை தவிர்த்து, அதற்கு  முன்பும், பின்பும் உள்ள நாட்களுக்கு, பணிக்கு வரவில்லை என பதிவிட போக்குவரத்துக் கழக நிர்வா கம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த முடிவை கைவிட்டு, தொழி லாளர்களுக்கு ஊதிய  இழப்பு ஏற் படாமல் தவிர்த்திட வேண்டும். குறிப் பாக தொழிலாளர் துறையுடனான பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண் டவற்றை மீறாமல் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

 இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments