'தினமலர்' ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி மறைவு

'விடுதலைஆசிரியர் கி. வீரமணி இரங்கல்

சென்னை 'தினமலர்' நாளேட்டின் ஆசிரியர் திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி (வயது 88) அவர்கள் இன்று (4.3.2021) காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்.

நமக்கும், அவருக்கும் கொள்கை- லட்சியம் ரீதியில் உள்ள வேறுபாடுகள் அநேகம் உண்டு. என்றாலும் சக பத்திரிகை ஆசிரியர் என்ற முறையிலும், மனிதநேய அடிப் படையிலும் அவரது இழப்பு, நமக்கு மிகவும் வருத்த மளிக்கிறது.

நாணயவியல் துறையில் தனி ஆர்வலர் அவர். அவரது உழைப்பினால் அப்பத்திரிகை வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றினார்.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், பத்திரிகைக் குடும்பத்தினர் அனைவருக்கும்  நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  

 

 கி.வீரமணி

ஆசிரியர்

'விடுதலை'

சென்னை

4-3-2021

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image