91 வயதிலும் ஏறு நடை போடும் புதுக்கோட்டை புட்பநாதன்

91 வயதில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டராக நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது புட்பநாதன் அவர்கள்.(பிறந்த தேதி: 1930 மே 5). பெற்றோர் ஏபேல் - அடைக்கலமேரி, துணைவர் இன்னாசியம்மாள், 4 மகன்கள், இரு மகள்கள். மகன்களில் ஆம்ஸ்ட்ராங் கழக ஈடுபாட்டில் தீவிரம் கொண்டவர். கல்வி - ஏழாம் வகுப்பு. சொந்த ஊர் - புதுக்கோட்டையையடுத்த பெருஞ்சுனை- கிறித்துவக் குடும்பம்.

இவர் ஊரைச்சேர்ந்த ஜோசப் என் பவர் புதுக்கோட்டையில் ஜவுளிக்கடை வைத்திருந்தார். அவர்விடுதலைவாசகர். நாள்தோறும்விடுதலையை படித்துவிட்டு, இவரிடம் கொடுப்பது வழக்கம். ‘விடுதலைவாசிப்பு இவரைக் கருஞ்சட்டைக்காரராக ஆக்கியது.

தமது 22ஆம் வயதில் பொதுக்கூட் டத்தில் தந்தை பெரியார் உரையைக் கேட்டு முழு இயக்கவாதியாக மாறினார். புத்தகங்களை வாங்கிப் படிக்கும் ஆர்வ மிகுதியால் மேலும் மேலும் செழுமை பெற்றார்.

1962ஆம் ஆண்டில் சென்னையில் திராவிடர் கழகம் நடத்திய வாக்காளர் மாநாட்டுக்குத் தனிப்பேருந்தில் தோழர்க ளுடன் சென்று வந்திருக்கிறார்.

தொழில் - விவசாயம். கட்டடத் திற்கான அரளைக்கல் வியாபாரம்.

புதுக்கோட்டை நகர திராவிடர் கழகத் தலைவர், புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். இப் பொழுதும் கழகக் காப்பாளர்களுள் ஒரு வர்.

ஈழத் தமிழர்களுக்கான போராட்டத் திலும், சமூக நீதிக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி பரிபூர ணத்தய்யங்கார் உருவப்பட எரிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு 15 நாள்கள் சிறையில் இருந்திருக்கிறார்.

கிறித்தவர்கள் அதிகமுள்ள பகுதியில் வாழும் இவரைபுட்பநாதன் மிகச் சிறந்த மனிதர், போயும் போயும் கடவுள் இல்லை என்கிற கழகத்தில் இருக்கிறாரே?’ என்று சொல்லுவார்களாம். ஆனால் அதையும் மீறி நன்மதிப்புள்ள மனிதராக இந்த 91 வயதிலும் வீறு நடைபோடும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இவர்.

திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில கிராமப்புறப் பிரச்சார அமைப்பாளர் அதிரடி அன்பழகன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தில்குமார், புதுக் கோட்டை மண்டல திராவிடர் கழகத் தலை வர் பெ.இராவணன், புதுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர் அறி வொளி, செயலாளர் ஆசிரியர் வீரப்பன், அறந் தாங்கி மாவட்டத் தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட தோழர்கள் உடனிருந் தனர்.

பேட்டி கண்டவர்: கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர்,

திராவிடர் கழகம்)

நாள் : 27.2.2021

Comments