மேற்கு வங்காளம், அசாம் சட்டசபைகளுக்கு முதல் கட்ட தேர்தல் 77 தொகுதிகளில் வாக்குப்பதிவு

புதுடில்லி, மார்ச் 28 மேற்கு வங்காளம், அசாம் மாநில சட்ட சபைகளுக்கு முதல் கட்டமாக 77 தொகுதிகளில் நேற்று (27.3.2021) நடைபெற்ற தேர்தலில் விறுவிறுப் பான வாக்குப்பதிவு நடந்தது. வாக் காளர்கள் கையுறை, முகக் கவசம் அணிந்து ஓட்டு போட்டனர்.

மேற்கு வங்காளத்தில் 30 சட்டசபை தொகுதிகளில் 191 வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை  தீர்மானிக்கும் உரி மையை 73 லட்சத்து 80 ஆயிரத் துக்கும் அதிகமான வாக்காளர்கள் பெற்றிருந்தனர். இவர்களுக்காக 10 ஆயிரத்து 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 73 ஆயிரம் மத்திய காவல் படையினர்  22 ஆயிரம் மாநில காவல் படையினர் பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங் கியது.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக பகவான்பூர் தொகுதிக்கு உட்பட்ட சத்சத்மால் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். மற்றொரு சம்பவத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சுஷாந்தா கோஷ், ஜார்கிராமில் தான் தாக்கப்பட்டதாக கூறினார்.

மாநில அமைச்சரும் திரிணா முல் காங்கிரஸ் மூத்த தலைவரு மான சஷிபாஞ்சா, வாக்காளர் களை பா... ஆதரவாளர்கள் தடிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை காட்டி விரட் டியடித்ததாக தெரிவித்தார்.

ஒரு தொகுதியில் வாக்காளர்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு ஓட்டு போட்டதாகவும், ஆனால் ஒப் புகை எந்திரத்தில் பா...வின் தாமரை சின்னத்தை காட்டியதாக வும் சர்ச்சை ஏற்பட்டது. மேலும் 100-க்கும் மேற்பட்ட வாக்கு எந்தி ரங்கள் பழுதானதாகவும் அவற்றில் 47 எந்திரங்கள் சரி செய்யப் பட்டதாகவும் தகவல்கள் கூறுகின் றன. சில வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்பட்டாலும் பெரும்பாலும் வாக்குப்பதிவு மாலை 6.30 மணிக்கு அமைதியாக நடந்து முடிந்தது.

முதல் கட்ட தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்காளத்தில் இரண்டா வது கட்ட தேர்தல் 1-ஆம் தேதி 30 தொகுதிகளில் நடைபெறுகிறது.

அசாம் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்தித்த 47 தொகுதிகளில் முதல் அமைச்சர் சர்வானந்தா சோனாவால், மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா உள்ளிட்ட 264 வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை முடிவு செய்யும் உரிமையை 81 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பெற்றி ருந்தனர். இவர்களுக்காக 11 ஆயி ரத்து 537 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

முதல் அமைச்சர் சர்வானந்தா சோனாவால் தனது சொந்த ஊரான திப்ருகாரில் உள்ள சாகித்ய சபா வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.

பெரும்பாலும் அசம்பாவி தங்கள் எதுவும் நடைபெறவில்லை. சில இடங்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பழுதானதாக புகார்கள் எழுந்தன.இங்கு மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தபோது 72.14 சதவீத வாக்குகள் பதிவானதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாநிலத்தில் இரண் டாவது கட்ட தேர்தல், 1-ஆம் தேதி 39 தொகுதிகளில் நடக்கிறது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image