7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான பா.ஜ.க. அரசின் கருத்து

 தமிழக மாணவர்கள் மீது நடத்திய நேரடி தாக்குதல்: கே.எஸ்.அழகிரி

சென்னை, மார்ச் 28 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான பா... அரசின் கருத்து: தமிழக மாணவர்கள் மீது நடத்திய நேரடி தாக்குதல் என்று கே.எஸ். அழகிரி கூறி யுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (26.3.2021) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது போல், புதுச்சேரியிலும் மருத்துவப் படிப்புகளில் சேர 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு எடுத்தது. இந்த இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தரு மாறு மத்திய பா... அரசுக்கு உத்தரவிடக்கோரி, புதுச்சேரி யைச் சேர்ந்த திவ்யதர்சினி என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசார ணைக்கு வந்தபோது, அமித் ஷாவின் உள்துறை அமைச் சகம் தாக்கல் செய்த மனுவில், ஒரே நாடு ஒரே தகுதி என்ற அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டு முடிவு, நீட் தேர்வின் சாராம்சத்தையே நீர்த்துப் போகச் செய்துவிடும். தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 இட ஒதுக் கீடு வழங்க சட்டம் இயற்றப் பட்டுள்ளது. அது குறித்து, மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லைஎன்று கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத் தில் இட ஒதுக்கீட்டுக்கு எதி ராக பா... அரசு தெரிவித் துள்ள கருத்து, தமிழக மாண வர்கள் மீது நடத்திய நேரடித் தாக்குதலாகும். பா... அர சின் இத்தகைய அணுகுமுறை சமூக நீதிக்கும் இட ஒதுக் கீட்டுக்கும் எதிரானது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image