தாராசுரம் வை.இளங்கோவன் ரூ.75,000 நன்கொடை

13-03-2021 அன்று குடந்தையில் நடைபெறும் கழகப் பொதுக்குழு, தீர்மான விளக்க பொதுக்கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் தாராசுரம் வை.இளங்கோவன் ரூ.75,000/- நன் கொடையாக கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, குடந்தை பெருநகரச் செயலாளர் பீ.இரமேஷ் (08-03-2021)

பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் கோபு.பழனிவேல் விடுதலை ஓராண்டு சந்தாவை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார்(7-3-2021 மன்னார்குடி)

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் வடசேரி புனித வியாகப்பர் ஆலய பங்குத் தந்தை ஆரோக்கிய ரமேஷ் திராவிடர் கழக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தனிடம் 'விடுதலை'  நாளிதழுக்கு சந்தா வழங்கினார்.

 6.3.2021 அன்று ஈரோடு பாண்டியன் ஏஜென்சி உரிமையாளர்இரா.எல்லாளன்  'திராவிடப் பொழில்'-க்கு சந்தா ரூ.800/-  கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம் அவர்களிடம் வழங்கினார் உடன் மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மற்றும் மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை உடனிருந்தனர்.

Comments