வங்கிகள் இணைப்பால் 7 வங்கிகளின் காசோலை ஏப்ரல்1லிருந்து செல்லாது

புதுடில்லி, மார்ச் 17- வங்கிகள் இணைப்பு முறை நடை முறைக்கு வருவதால் வருகிற ஏப். 1ஆம் தேதி முதல் 7 வங்கி களின் காசோலை செல் லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10 பொதுத்துறை வங்கி களை  நான்கு பெரிய வங்கிக ளாக மத்திய அரசு இணைத் துள்ளது. தேனா மற்றும் விஜயா வங்கி ஏப்ரல் 1, 2019 அன்று பாங்க் ஆப் பரோடா வுடன் இணைந்தன. ஓரியண் டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா  ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கி உடன் இணைக்கப்பட்டன. சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட் டது. ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி யூனி யன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்தன. அலகாபாத் வங்கியானது  இந்தியன் வங் கியுடன் இணைக்கப்பட்டது. இந்தநடவடிக்கையால் காசோலைகள், ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு வழங்கு வதில் இணைக்கப்பட்ட புதிய வங்கி அதற்கான பிரத்தியேக மான காசோலைகள், இணைக் கப்பட்ட வங்கி நிறுவனம் புதிய  காசோலை புத்தகங்கள், டெபிட் கார்டு மற்றும் கிரெ டிட் கார்டுகளை வழங்கும். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பதால், அது வரையில் பழைய கார்டுக ளையே பயன்படுத்திக்கொள் ளலாம் என்று அறிவிக்கப்பட் டது. 

இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இணைக்கப்பட்ட வங்கி களின் பழைய காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள ஓபிசி, யுனைடெட் பாங் ஆஃப் இந்தியா,  விஜயா வங்கி, அலகாபாத் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந் திரா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய 7 வங்கிகளின் காசோலை புத்தகங்கள் ஏப் ரல் 1ஆம் தேதி முதல் செல் லாது. இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்க ளது தற்போதைய  காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புக்குகளை மார்ச் 31 வரை மட்டுமே பயன்படுத்த முடி யும். தற்போதுள்ள காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புக்குகள் செல்லாமல் போன பிறகு, வாடிக்கையாளர்களின் கணக்கு எண், அய்.எஃப்.எஸ்.சி,  எம்.அய்.சி.ஆர் குறி யீடு, கிளை முகவரி, காசோலை புத்தகம், பாஸ் புக் ஆகியன மாற்றப்படும்.

Comments