எச்சரிக்கை - தொற்று அதிகரிப்பு தமிழகத்தில் 685 பேருக்கு கரோனா தொற்று

சென்னை, மார்ச் 12- தமிழகத் தில் தொடர்ந்து 7ஆவது நாளாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று 685 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென் னையில் நாள் ஒன்றுக்கு சரா சரியாக 120-க்கும் மேற்பட்ட வர்களுக்கு கரோனா தொற்று புதிதாக உறுதி செய்யப்பட் டது. இந்த நிலையில் தற் போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 260-க்கும் மேற்பட் டவர்களுக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

சென்னையை தொடர்ந்து கோவை, செங்கல்பட்டு, திரு வள்ளூர், தஞ்சாவூரில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 4 ஆயி ரத்துக்கும் குறைவாக இருந்த சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை தற்போது 4 ஆயிரத்து 344 ஆக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தமி ழகத்தில் நேற்றைய கரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 65 ஆயிரத்து 764 பேருக்கு கரோனா பரிசோ தனை மேற்கொள்ளப்பட் டது. இதில் 406 ஆண்கள், 279 பெண்கள் என மொத்தம் 685 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னை யில் 292 பேரும், கோவையில் 52 பேரும், செங்கல்பட்டில் 51 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, விழுப்புரம், விருது நகர், ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ள னர். பெரம்பலூரில் நேற்று புதிதாக பாதிப்பு இல்லை. இந்த பட்டியலில் 12 வயதுக் குட்பட்ட 31 குழந்தைகளுக் கும், 60 வயதுக்கு மேற்பட்ட 135 முதியவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 77 லட்சத்து 68 ஆயிரத்து 971 பேருக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 57 ஆயிரத்து 602 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 18 ஆயிரத்து 136 ஆண்களும், 3 லட்சத்து 39 ஆயிரத்து 431 பெண்களும், 3ஆம் பாலினத் தவர்கள் 35 பேரும் அடங்கு வர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 31 ஆயிரத்து 468 குழந்தைகளும், 60 வய துக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 686 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று கரோ னாவுக்கு 5 பேர் உயிரிழந்துள் ளார். அந்தவகையில் சென் னையில் 3 பேரும், செங்கல்பட் டில் இருவரும் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் இது வரையில் 12,535 பேர் உயிரி ழந்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 543 பேர் நேற்று குணமடைந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென் னையில் 263 பேரும், கோவை யில் 49 பேரும், செங்கல்பட்டில் 48 பேரும் அடங்குவர். இது வரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 40 ஆயிரத்து 723 பேர் கரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள் ளனர். தற்போது தமிழகத்தில் 4 ஆயிரத்து 344 பேர் சிகிச் சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Comments