தமிழகத்தில் 671 பேருக்கு கரோனா தொற்று

 சென்னைமார்ச் 11 தமிழகத் தில் கவலை அளிக்கும் வகையில் ஒரே நாளில் 671 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயருகிறது.

தமிழகத்தில் நேற்று (10.3.2021) ஒரே நாளில் 64 ஆயிரத்து 905 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 407 ஆண்கள், 264 பெண்கள் என மொத்தம் 671 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 275 பேரும், கோவையில் 63 பேரும், செங்கல்பட்டில் 53 பேரும், திருவள்ளூரில் 39 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, தேனி, திருப்பத்தூர், தூத்துக்குடியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comments