ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 628 பேர் விடுவிப்பு

யாங்கூன், மார்ச் 26- மியான்மாவில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரால் கைது செய்யப் பட்டிருந்த 628  பேர்  விடுவிக்கப்பட்டனர்.

மியான்மாவில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில்  ஜனநாயகத்தை வலியுறுத்தி பல வாரங்களாக நீடித்து வரும் தீவிர போராட்டத்தின் இடையே, போராட்டக்காரர் கள் விடுவிக்கப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித் துள்ளதாவது: மியான்மாவில் போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டிருந்த 628 பேரை ராணுவ ஆட்சியாளர்கள் விடு வித்தனர்.

யாங்கூன் நகரின் இன்செயின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக அந்தப் பகுதியைச் சோந்தவர்கள் தெரிவித்தனர்.

விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர் கள் எனவும் போராட்டத்தின் சின்னமான மூவிரல் வணக்கம் செலுத்தியவாறு அவர்கள் உற்சாகத்துடன் சிறையிலிருந்து வெளியே வந்ததாகவும் அவர்கள் கூறினர்.

தலீபான் பயங்கரவாதிகளின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை

ஆப்கன் பாதுகாப்பு ஆலோசகர் தகவல்

காபுல், மார்ச் 26- தலீபான் பயங்கரவாதிகளின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “ஆப்கானிஸ்தான் அரசின் அமைதிப் பேச்சுவார்த்தை குழு, தலீபான் பயங்கரவாதி களின் அணுகுமுறையில் எந்த மாற்றத்தையும் காணவில்லை. இது அமெரிக்க படையெடுப்புக்கு முன்பு அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இருந்ததை விட மிகவும் வித்தியாசமாக தெரிய வில்லைஎன்று ஹம்துல்லா மொஹிப் தெரிவித்தார்.


Comments