அமெரிக்காவில் புயல்: 5 பேர் பலி

வாசிங்டன், மார்ச் 28- அமெரிக்கா ஏற்கெனவே கரோனா வைரசுடன் போராடி வரும் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அந்த நாட்டை அடிக்கடி பயங்கரப் புயல்கள் தாக்கி வருகின்றன.

அந்த வகையில் நேற்று (27.3.2021) தெற்கு மாகாணமான அலபாமாவை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்றால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சாலைகளில் சரிந்து விழுந்தன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 10 ஆயிரத்துக்கும் அதிக மான வீடுகள் இருளில் மூழ்கின.

அதேபோல் சாலைகளில் மரங்கள் சாய்ந்து கிடப்ப தால் பல இடங்களில் சாலைப் போக்குவரத்து முற்றிலு மாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புயலில் சிக்கி 100-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

இதனிடையே இந்த சக்தி வாய்ந்த புயல் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

புயல் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக மாகாண ஆளுநர் கே இவே தெரிவித்துள்ளார்.

அதே சமயம் மேலும் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் நேற்று (27.3.2021) அலபாமா மாகாணத்துக்கு செல்ல இருந்த நிலையில் புயலைத் தொடர்ந்து தனது பயணத்தை ரத்து செய்தார்.

மியான்மா போராட்டம்:

பலி எண்ணிக்கை 320- ஆக உயர்வு

யாங்கூன், மார்ச் 28- மியான்மா நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறை கேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.

இதனை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது.‌ நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட் டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டத்தை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

ஆனாலும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போரட்டத்தை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 320- ஆக உயர்ந்துள்ளது.

Comments